அமெரிக்க அதிபர் டிரம்பே வந்தாலும் பயமே கிடையாது; பிரதமர் மோடி இருக்காரு பார்த்துக்கொள்வார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி பேச்சு

அதிமுகவிற்கு எந்தப் பிரச்னை வந்தாலும் பிரதமர் நரேந்திர மோடி பார்த்துக்கொள்வார் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின்
அமெரிக்க அதிபர் டிரம்பே வந்தாலும் பயமே கிடையாது; பிரதமர் மோடி இருக்காரு பார்த்துக்கொள்வார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி பேச்சு

தேனி: அதிமுகவிற்கு எந்தப் பிரச்னை வந்தாலும் பிரதமர் நரேந்திர மோடி பார்த்துக்கொள்வார் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அதிரடி பேச்சு அதிவிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று வெள்ளிக்கிழமை தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: 
அதிமுகவிற்கு எந்தப் பிரச்னை வந்தாலும் மோடி பார்த்துக்கொள்வார் என்றார். 

மேலும், இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ அதுதான் உண்மையான அதிமுக. அது எங்களுக்கு தான் (ஓபிஎஸ் - இபிஎஸ் அணி) கிடைக்கப்போகிறது. எங்களிடம் 50 மாவட்ட செயலாளர்களில் 46 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். 50 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 46 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 98 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள், நகரகழக செயலாளர்கள் இருக்கிறார்கள். பின்னர் எப்படி தவறான தீர்ப்பை கூற முடியும்? இவை அனைத்தையும் விட தில்லி நம்ம பக்கம்தான் உள்ளது. எனவே, ஒருவருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்றார். 

ஒபாமா வந்தாலும் சரி, டிரம்பே வந்தாலும் சரி பயமே கிடையாது. நமக்கு பிரதமர் மோடி இருக்காரு. எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார். யாரைக் கண்டும், எந்த பேடியை கண்டும் அச்சப்படத் தேவையில்லை, எல்லாம் மேல இருப்பவன் பார்த்துக்கொள்வான் என்பதுபோல, நமக்கு மோடி இருக்கிறார். பிரதமர் மோடி இருக்கும் வரை அதிமுகவை அசைக்கவோ முடியாது. 

சின்னமும், கட்சியும் நமக்கு தான் கிடைக்கப்போகிறது. அதிமுக அழியாது. இனிதான் ஃபினிக்ஸ் பறவை போல் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து பறக்கபோகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

ஏற்கனவே, அதிமுகவை மத்தியில் ஆளும் பாஜக அரசு கட்டுப்படுத்தி வருவதாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு அதிமுகவிரினடையே மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com