அதிமுக கட்சி விதிகளை தினகரன்  ஒழுங்காக படிக்கவேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி

அதிமுக கட்சி விதிகளை தினகரன் ஒழுங்காக படிக்கவேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
அதிமுக கட்சி விதிகளை தினகரன்  ஒழுங்காக படிக்கவேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி

சென்னை: அதிமுக கட்சி விதிகளை தினகரன் ஒழுங்காக படிக்கவேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த செப்டம்பர் 12-இல் பொதுக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி கூட்டியுள்ள கூட்டத்திற்கும், கட்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதிமுகவின் சட்டதிட்டத்தின் அடிப்படையில் பொதுக்குழுவை கூட்டுவதற்கு பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டத்தை அறிவித்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவின் உண்மையானவர் யாரும் கலந்துகொள்ள வேண்டாம். கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்நிலையில், தினகரனுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
பொதுக்குழுவை கூட்ட தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. 100 சதவிக்த ஒற்றுமையுடன் தங்கள் அணி உள்ளது என்று கூறினார்.
மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால் பொதுக்குழுவை கூட்டமுடியும், 100 சதவிகித ஒற்றுமையுடன் இருக்கும் எங்களை பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்று சொல்ல எவ்வித தார்மீக உரிமையும் இல்லை.

ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர், கட்சியிலிருந்து பல ஆண்டுகள் ஒதுக்கப்பட்ட தினகரன் பொதுக்குழு பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. தலைமை கழக நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டு பொதுக்குழுவை கூட்டுகிறோம்.

தினகரன் கட்சி விதியை சரியாக படிக்கவில்லை முறையாக அனைவருக்கும் அழைப்பு கொடுத்து 15 நாட்கள் இடைவெளியில் கூட்டுகிறோம். இதில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க எந்தவித முகாந்திரமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com