புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு கடை வளாகம் பயனின்றி உள்ளது: கிரண்பேடி வேதனை

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பு கடை வளாகம் பயனின்றி உள்ளது
புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு கடை வளாகம் பயனின்றி உள்ளது: கிரண்பேடி வேதனை

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பு கடை வளாகம் பயனின்றி உள்ளது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வேதனை தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாள்களில் புதுவை முழுவதும் ஆளுநர் கிரண்பேடி பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தூய்மை இந்தியா, சட்டம் ஒழுங்கு
பாதுகாப்பு, குப்பைகள் வாருதல், நீர் நிலைகள் பாதுகாப்பு தொடர்பாக அவர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சனிக்கிழமை லாஸ்பேட்டையில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பை முதலில்ஆய்வுசெய்தார். அதில் வட்ட வடிவில் கட்டப்பட்ட கடை வளாகம் பயன்பாடின்றிகுப்பைகூளமாக இருப்பதை கண்டார். மேலும் அங்கு பயன்படுத்தாமல் இருக்கும் அறைகளை ஆய்வு செய்தார். அதில் பல்வேறு குப்பைகள் போடப்பட்டு சீர்கேடான நிலையில் இருந்ததை பார்த்தார். அதனை அகற்றி மக்கள் வசிக்கும் பகுதியாக மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தை ஆய்வ செய்தார். அங்கு பயணிகள் அமரும் இருக்கைகள் , பயன்படுத்தும் கழிவறைகள் உட்பட அனைத்தும் ஆய்வு செய்தார். புதிய பேருந்து நிலையத்தை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மேலும் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். பஸ் நிலையத்தில் எம்ஆர்பி விலையில் தான் பொருள்கள் விற்கப்படுகிறதா என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். பயணிகள் தங்கள் பொருள்களை வைப்பதற்கான பாதுகாப்பு அறையை அமைக்க வேண்டும். பஸ் நிலையம் அருகே உள்ள நடைபாலத்தை முறையாக பயன்படுத்த வேண்டும்.

பயணிகளுக்கு ஆட்டோ கட்டணம் குறித்த விவரங்களை அச்சடித்து இலவசமாக வழங்க வேண்டும் என்றார். அப்போது கண்ணன் என்ற சமூக ஆர்வலர் கட்டண விவரங்களை தான் இலவசமாக அச்சடித்து தருவதாகக் கூறினார்.  இதுதொடர்பாக ஆளுநர் கிரண்பேடி கூறியதாவது:

லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பில் உள்ள கடை வளாகம் பயன்பாடின்றிஉள்ளது. குடியிருப்பு வாசிகளுக்கு பயன் தரும் வகையில் அக்கடைகளை திறந்து பயன்படுத்த வேண்டும். இளைஞர் பெண்கள் சங்கங்களை இதில் ஈடுபடுத்தலாம்.

அரசு ஊழியர் குடியிருப்பு வாசிகளும் தங்களுக்கு என குடியிருப்போர் நலச்சங்கத்தை தொடங்கி அனைத்து ஆதாரங்களையும் முறையாக பயன்படுத்த வேண்டும். பல கட்டடங்கள் கடன் வாங்கி கட்டப்பட்ட நிலையில் வீணாக பயன்படுத்தாமல் அவற்றுக்கு வட்டி மட்டும் செலுத்துவது வேதனை தருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com