ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது: ஆந்திராவில் அமல்!

ஆந்திராவில் ஹெல்மெட் (தலைகவசம்) அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற புதிய
ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது: ஆந்திராவில் அமல்!

ஹைதராபாத்: ஆந்திராவில் ஹெல்மெட் (தலைகவசம்) அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற புதிய விதிமுறை நேற்று வியாழக்கிழமை முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மாநில அளவிலான சாலை பாதுகாப்பு குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை மாநில துணை போக்குவரத்து ஆணையர் சி.வி.கே. சுபா ராவ் தெரி்வித்தார். 
அப்போது, ஆந்திராவில் தலைகவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வருவபவர்களுக்கு "பெட்ரோல்" வழங்கக்கூடாது என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விதிமுறை நேற்று வியாழக்கிழமை (செப்.28) முதல் அமலுக்கு வந்தது என தெரி்வித்தார். 

இந்த உத்தரவை அமல்படுத்துவதில் மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்க் விற்பனையாளர்களுடன் நடந்த சந்திப்புக்கு பின்னர், அரசின் உத்தரவுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தசரா விடுமுறைக்குப் பிறகு விதிமுறைகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என ராவ் தெரிவித்தார். 

இருசக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்கள் தலைகவசம் அணியவும், 4 சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியவும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

இந்த புதிய உத்தரவினால் மாநிலம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைகவசம் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இருசக்கர வாகன விபத்துகளை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com