​இன்று நாடு தழுவிய போராட்டம்: பல்வேறு பகுதிகளில் 114 தடை உத்தரவு

நாடு தழுவிய போராட்டத்துக்கு (பாரத் பந்த்) சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பாதுகாப்பை பலப்படுத்துமாறு
​இன்று நாடு தழுவிய போராட்டம்: பல்வேறு பகுதிகளில் 114 தடை உத்தரவு

நாடு தழுவிய போராட்டத்துக்கு (பாரத் பந்த்) சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தினை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நீர்க்கச் செய்துவிட்டதாகக் கூறி, உத்தரப்பிரதேசம், ஒடிசா, பிகார், குஜராத் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் தலித் அமைப்பினர் கடந்த 2-ஆம் தேதி நடத்திய நாடு தழுவிய போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதில், 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில், கல்வி, வேலை வாய்ப்பில் ஜாதி ரீதியிலான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சில அமைப்புகள் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 10), நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. 

இதையடுத்து எந்தவித அசம்பாவிதமும் நேரிடாத வகையில், தடை உத்தரவு பிறப்பிப்பது உள்பட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம்-ஒழுங்கு நிலையை உறுதிசெய்வதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மட்டுமே பொறுப்பாளர்கள் ஆவர். எனவே, தங்கள் நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதியில் வன்முறை நிகழ்ந்தால் அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 

இந்நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மற்றும் பரத்பூர், மத்தியப் பிரதேசத்தின் போபால் மற்றும் உத்தரகாண்டின் நைனிட்டால் ஆகிய பகுதிகளில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் கூடுவோ, ஊர்வலங்கள் மற்றும் தர்ணா நடத்தவோ தடை விதிக்கப்படு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வரும் 15-ஆம் தேதி வரை இரவு 9 மணி வரை இணையதள சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளது. 

தடை உத்தரவை மீறுவோர்கள் மீது "கடுமையான நடவடிக்கை" எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com