ஆந்திரத்தில் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது

ஆந்திரத்தில் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராடி வரும் மக்கள் அமைப்பினருடன் பல்வேறு அமைப்புகள் இணைந்து மாநிலத்தில் இன்று

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராடி வரும் மக்கள் அமைப்பினருடன் பல்வேறு அமைப்புகள் இணைந்து மாநிலத்தில் இன்று திங்கள்கிழமை ஒரு நாள் நடத்தும் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. 

இதற்கு மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

ஆனால் மாநிலத்தில் ஆளும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி இப்போராட்டத்தை ஏற்க முடியாது என்று கூறிவிட்டது. இதுபோன்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

அதனை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com