வங்கி மோசடி விவகாரம்: ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு சம்மன்

வராக்கடன் மற்றும் வங்கி மோசடி குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ரிசர்வ் வங்கி ஆளுநரை நாடாளுமன்ற குழு கேட்டு கொண்டுள்ளது.
வங்கி மோசடி விவகாரம்: ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு சம்மன்

வராக்கடன் மற்றும் வங்கி மோசடி குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ரிசர்வ் வங்கி ஆளுநரை நாடாளுமன்ற குழு கேட்டு கொண்டுள்ளது.

இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளின் மொத்த வராக்கடன் அளவு டிசம்பர் மாத முடிவில் 8,40,958 கோடி ரூபாயாகவும், இதில் சேவை மற்றும் விவசாயத் துறைக்கு அதிகளவிலான கடன் வழங்கியுள்ளதாக வங்கித்துறை தெரிவித்துள்ளது. 

கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவர் மெஹூல் சோக்ஸி மற்றும் நாட்டை விட்டு ஓடிய நீரவ் மோடியின் மாமா, பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலியான ஆவணங்களை வைத்து சுமார் 13,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துள்ளது, இந்த 13,000 கோடி ரூபாய் மோசடியும் மும்பையில் இருக்கும் ஓரே கிளையில் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி ஆகியோருக்குப் பெயிலில் வர முடியாத கைது வாரண்டை சிபிஐ நீதிமன்றம் அளித்துள்ளது. இந்நிலையில் வராக்கடன் மற்றும் வங்கி மோசடி குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ரிசர்வ் வங்கி ஆளுநரை நாடாளுமன்ற குழு கேட்டு கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com