திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விஐபி சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது: தேவஸ்தானம் அறிவிப்பு

கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாளை முதல் விஐபி சிபாசிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது என
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விஐபி சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாளை முதல் விஐபி சிபாசிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தேவஸ்தான நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் ஏழுமலையான தரிசிப்பதற்கு தற்போது பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும். எனவே, திருப்பதியில் கோடை விடுமுறையை முன்னிட்டு வாரத்தில் மூன்று நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், நாளை முதல் ஜூலை மாதம் 16-ஆம் தேதி வரை விஐபி சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தர்கள் வாடகை அறை, விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு, ஆர்ஜித சேவை டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அட்டையை சமர்ப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com