புதிய தொழிற் கொள்கை விரைவில் முடிவு செய்யப்படும்: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு 

புதிய தொழிற் கொள்கை விரைவில் முடிவு செய்யப்படும் என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். 
புதிய தொழிற் கொள்கை விரைவில் முடிவு செய்யப்படும்: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு 

புதிய தொழிற் கொள்கை விரைவில் முடிவு செய்யப்படும் என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். 

இந்த புதிய கொள்கை 1991 இன் தொழில்துறை கொள்கையை மாற்றுவதோடு, தற்போதைய நிதி நெருக்கடியை சமநிலைப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சர்வதேச சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கான மாநாட்டில் இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: - 

புதிய தொழில் கொள்கை மூலம்  வளர்ந்து வரும் துறைகளை மேம்படுத்துவதோடு, ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒழுங்குமுறை தடைகளை குறைப்பதோடு தொழிற்துறையில் ரோபாட்டிக்ஸ் மற்றும்  தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவதாக இருக்கும் என்று தெரிவித்தார். 

பெரும் தொழில் நிறுவனங்களுக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் இடையே பாராட்டத்தக்க அளவிற்கு நட்புறவு உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். சிறு தொழில் நிறுவனங்கள் நீடிப்பதுதான் பெரும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும். பெரும் தொழில் நிறுவனங்களுக்கும், சர்வதேச நிறுவனங்களுக்கும் சர்வதேச மதிப்பு மற்றும் வினியோகத் தொடர் தேவைப்படும் நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இல்லாமல் அது சாத்தியமாகாது என்றும் அவர் கூறினார். தற்போதைய தருணத்தில், பெரிய மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள், சர்வதேசப் பொருளாதார நிலையை உயர்த்தக் கூடும் என்பதால், இவற்றுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com