கச்சா எண்ணை விலை குறைகிறது.. பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயருகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

கச்சா எண்ணை விலை குறைந்து வரும் நிலையில் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது என்று
கச்சா எண்ணை விலை குறைகிறது.. பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயருகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

கச்சா எண்ணை விலை குறைந்து வரும் நிலையில் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்க பதிவில், கச்சா எண்ணை விலை குறைகிறது, ஆனால் மக்களுக்கு வரிச்சுமை கூடுகிறது இன்று பெட்ரோல், டீசல் எந்தக் காலத்திலும் இல்லாத விலைக்கு விற்கின்றன!

ரூ 6 லட்சம் கோடியில் ஒரு பகுதியை நிவாரணமாக மக்களுக்குத் தந்திருக்க வேண்டுமா இல்லையா?  பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. ஆனால் மக்களுக்கு கொஞ்சம் கூட நிவாரணம் அளிக்கப்படவில்லை. நான்கு ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீது சுமத்தப்பட்ட கூடுதல் வரிச்சுமை ரூ 6 லட்சம் கோடி என பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com