மாடு, பன்றி இறைச்சி சாப்பிட்ட நேரு பண்டிதரே அல்ல: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

மாடு மற்றும் பன்றி இறைச்சியை சாப்பிட்ட முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவை எப்படி பண்டிதராக ஆக இருக்க முடியும் என பாஜக
மாடு, பன்றி இறைச்சி சாப்பிட்ட நேரு பண்டிதரே அல்ல: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு


ஜெய்ப்பூர்: மாடு மற்றும் பன்றி இறைச்சியை சாப்பிட்ட முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு எப்படி பண்டிதராக ஆக இருக்க முடியும் என பாஜக எம்எல்ஏ கியான் தேவ் அஹூஜா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ராம்கர் பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ கியான் தேவ் அஹுஜா, அவ்வப்போது அதிரடியாக பேசி சர்ச்சையை கிளப்பி விடுவதில் பெயர் பெற்றவர். புகழ்பெற்ற தில்லி ஜவகர்லால் பல்கலைக்கழகம், போதைப்பொருட்கள் மற்றும் விபச்சாரம் கூடாரமாக இருப்பதாகவும், அங்கு நாள்தோறும் 2 ஆயிரம் காலி மது பாட்டில்களும், சுமார் 3 ஆயிரம் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளும் சிதறி கிடப்பதாக பேசி அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதையடுத்து பசு மாடுகளை கடத்துபவர்களும், வெட்டுபவர்களும் கொல்லப்படுவார்கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவைப் பற்றி இன்று சனிக்கிழமை சர்ச்சைக்குரிய கருத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் மீண்டும் சர்ச்சையை கிளிப்பி உள்ளார்.  

இதுகுறித்து அவர் கூறுகையில், நாட்டில் நிலவும் அனைத்து சமூக தீமைகளுக்கும் நேரு குடும்பங்களே காரணம். மேலும் பண்டிட் ஜவகர்லால் நேரு என்று நேருவை அழைப்பதே தவறாகும். மாட்டிறைச்சி மற்றும் பன்றியின் இறைச்சியை உண்பவர்களை எப்படி பண்டிட் என்று அழைக்க இயலும். காங்கிரஸே நேரு பெயருக்கு முன்னர் பண்டிட் என முன்மொழிந்தது என்றும் நேரு குடும்பத்தினர் பண்டிட் என்ற பெயரை சேர்த்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர். அரசியலுக்காக மதம் மற்றும் ஜாதியை நேரு குடும்பத்தினர் பயன்படுத்துகின்றனர். நேரு குடும்பத்தினர் பெயரில் உள்ள நினைவு சின்னங்களை இடித்து தள்ள வேண்டும் எனக் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்கு வங்கி அரசியலுக்காக தேர்தல் நேரத்தில் மட்டும் கோயிலுக்கு செல்கிறார். அவருக்கு இந்து மத பண்பாடுகளில் நம்பிக்கை இல்லை. ஆனால் ராகுல் காந்தி தனது பாட்டி இந்திரா காந்தியிடம் இருந்து கோயிலுக்கு செல்லும் பழக்கத்தை கற்றுக் கொண்டதாக சச்சின் பைலட் போன்றோர் பொய் சொல்கின்றனர்.

இதை அவர்களால் நிருபிக்க முடியாது. அவ்வாறு நிருபித்தால் நான் பதவி விலக தயாராக இருக்கிறேன். இல்லாவிட்டால் அவர்கள் பதவி விலக வேண்டும் எனக் கூறினார்.

இதனிடையே ராஜஸ்தான் மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, பாஜக சார்பில் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் கவுரவ் யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரசாரத்தை ஜெய்ப்பூரில் இருந்து இன்று தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1998-இல் ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு முதல் முறையாக அஹூஜா தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் 2003 தேர்தலில் தோல்வியடைந்தார், பின்னர் 2008 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

கடந்த காலத்தில் அஹூஜா தனது பகுதியில் செயல்பட்ட மாடு கண்காணிப்பாளர்களுக்கு நிதியுதவி அளித்ததாக கூறினார். பிளஸ் 2 வரையே படித்த அஹூஜா, தனது அதிகாரப்பூர்வ பதிவில் ஒரு பத்திரிகையாளர் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com