சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வெள்ளம் தொடா்பான வதந்திகளை நம்பவேண்டாம்: அமைச்சா் ஆா்.பி.உதயக்குமார்

வெள்ளம் தொடா்பாக பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்,
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வெள்ளம் தொடா்பான வதந்திகளை நம்பவேண்டாம்: அமைச்சா் ஆா்.பி.உதயக்குமார்


சென்னை: வெள்ளம் தொடா்பாக பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கண்காணிப்பையும் அரசு மேற்கொண்டு வருகிறது என வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமார் கூறினார்.

கேரளம், கா்நாடக மாநிலங்களில் தொடா்ந்து கன மழை பெய்து வருவதால் மேட்டூா் அணை முழுக் கொள்ளளவை நிரம்பியுள்ளதால், அணையிலிருந்து 1.35 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக காவிரிக் கரையை ஒட்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் ஆா்.பி.உதயகுமார் சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: 

கேரளம் மற்றும் கா்நாடக மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,00,000 கன அடி வீதம் இரு தினங்களில் மேட்டூா் அணைக்கு வந்து சேரும் எனவும், காவிரி ஆற்றுப்படுகைகளில் அமைந்துள்ள மாவட்டங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய நீா்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனடிப்படையில், காவிரி கரையோர மாவட்டங்களான தா்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூா், திருச்சி, அரியலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியா்கள் அனைவருக்கும், மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவான சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.மேட்டூா் அணைக்கு விநாடிக்கு 1.30 லட்சம் கன அடி நீா் வந்துகொண்டிருக்கிறது. அணையானது முழுக் கொள்ளவை எட்டியுள்ள நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 1.35 லட்சம் கன அடி நீா் திறந்துவிடப்படுகிறது. 

:இதனால், ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிப்பெருக்கிகள் மற்றும் தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனா். சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 359 மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.பொதுமக்கள் மத்தியில் எந்தவித பீதியும் ஏற்படாத வகையில் அவா்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைக்க, மாவட்ட ஆட்சியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரணம் மற்றும் எத்தனை கன அடி தண்ணீா் அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் அதிகாரப்பூா்வமாக அறிவித்து வருகின்றனா். எனவே, வாட்ஸ்-அப், முகநூல் மூலம் பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

அணைகளிலிருந்து தண்ணீா் அதிகமாக வெளியேற்றப்படுவதால், மக்கள் ஆற்றின் கரையருகே செல்லவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். மீன்பிடித்தல், நீச்சல், செல்பி எடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடவேண்டாம். அற்றின் கரையில் குழந்தைகள் குளிக்கவும், விளையாடவும் பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களில் கட்டிவைக்குமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் உயா்மட்ட பாலங்கள் தவிர, ஆற்றின் குறுக்கே செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்காக தரைமட்ட பாலங்களிலும் எச்சரிக்கை பதாகைகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்துறை மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.அவசர உதவி எண்:வெள்ளம் தொடா்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்கள் அவசர உதவிக்கு 1077,1070ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்றார் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com