முதல்வர்களுக்கு தேசிய கொடி ஏற்றும் உரிமை பெற்றுத் தந்தவர் கருணாநிதி!

திமுக அவரச செயற்குழு கூட்டத்தில் சிறப்புத் தீர்மானமாக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர்களுக்கு தேசிய கொடி ஏற்றும் உரிமை பெற்றுத் தந்தவர் கருணாநிதி!

திமுக அவரச செயற்குழு கூட்டத்தில் சிறப்புத் தீர்மானமாக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை டி.கே.எஸ் இளங்கோவன் வாசித்தார்.

இரங்கல் தீர்மானத்தில், சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசிய கொடி ஏற்றுவதற்கான உரிமையை பெற்றுத்தந்தவர் கருணாநிதி. அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரவித்துகொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். 

- பொது வாழ்வில் ஈடுபடக் கூடியவர்கள் பார்த்து படித்து கற்றுக் கொள்ளக் கூடிய பல்கலைகழகமாக இருந்தவர் கருணாநிதி. 

- தமிழகம் மற்றும் இந்திய அளவில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

-  பெண்களுக்கு சொத்துரிமை கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.

- உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி. 

-  கிராமங்களில் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு வித்திட்டவர் கருணாநிதி. 

-  மெட்ராஸ் என்பதை சென்னை என்று மாற்றியவர். 

-  கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தொடர முனைப்பு காட்டியவர்.

-  இதழியல் மற்றும் எழுத்துத்துறைக்கு கருணாநிதியின் பங்கு அளப்பறியது. 

- ஏற்றத்தாழ்வு போக்கி, சமத்துவம் உருவாக்குவதற்கு மாநிலம் முழுவதும் சமத்துவபுரம் அமைத்தவர் கருணாநிதி. 

- பெரியாரின் விருப்பப்படி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டத்தை நிறைவேற்றினார். 

-  கருத்துச் சுதந்திரத்துக்காக, ஆட்சியை இழந்தவர். 

- கை ரிக்‌ஷா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம், உழவர் சந்தை, நமக்கு நாமே திட்டம் தந்தவர் கருணாநிதி.

- மாநிலச் சுயாட்சிக்காக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவர் கருணாநிதி.

- ஈழத் தமிழர்களின் உரிமைக்காக 1956 முதலே குரல் கொடுத்து வந்தவர்.

அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துகொள்கிறோம் என்று கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் வாக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com