வாஜ்பாய் கடந்து வந்த அரசியல் பாதை!

இந்தியாவில் வெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர்களில் முதன்மையானவராக விளங்கிய வாஜ்பாய், கட்சி
வாஜ்பாய் கடந்து வந்த அரசியல் பாதை!


இந்தியாவில் வெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர்களில் முதன்மையானவராக விளங்கிய வாஜ்பாய், கட்சி வேறுபாடுகள் கடந்து எதிர்க்கட்சித் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்; எந்த சூழ்நிலையிலும் நடுநிலை தவறாதவர்; அரசியலில் நேர்மைக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர்; அணுகுமுறையிலும், தோற்றத்திலும் எளியவர் என்று புகழப்பட்டவர்.
தான் பெற்ற புகழ்ச்சிக்கெல்லாம் அவர் அரசியல் கடந்து வந்த பாதைகளை பார்ப்போம்...
1951 - பாரதீய ஜனசங்கத்தை தொடங்கினார்.
1957 - மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1957- 77 - பாரதீய ஜனசங்க மக்களவை தலைவர்,
1962 - மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 
1966 - 67 - அரசின் உத்தரவாத குழு தலைவராக இருந்தார்.
1967 - மக்களவைக்கு இரண்டாவது முறையாக மீண்டும் தேர்வு.
1967 - 70 - பொதுக்கணக்கு குழு தலைவர்
1968 - 73 - பாரதீய ஜனசங்க தலைவர்
1971 - மக்களவைக்கு 3வது முறையாக தேர்வு
1977 - மக்களவைக்கு 4வது முறையாக தேர்வு
1977 - 79 - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து வந்தார். 
1977 - 80 - ஜனதா கட்சி உறுப்பினர், நிறுவனர்.
1980 - 5வது முறையாக மக்களவை உறுப்பினராக தேர்வு
1980 - 86 - பாஜக தலைவராக பொறுப்பேற்பு 
1980 - 84, 1986, 1993 - 96 வரை மக்களவை பாஜக தலைவர்.
1984 - மக்களவைத் தேர்தலில் குவாலியர் தொகுதியில் காங்கிரஸ் உறுப்பினர் மாதவ்ராவ் சிந்தியாவிடம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இது மட்டுமே வாஜ்பாய் சந்தித்த மிகப்பெரிய தோல்வி எனலாம். 
1986 - இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு
1988 - 90 - தொழில் ஆலோசனை கமிட்டி உறுப்பினர்.
1990 - 91 - புகார் குழு தலைவர்
1991 - 6வது முறையாக மக்களவை உறுப்பினராக தேர்வு.
1991 - 93 - பொது கணக்கு குழு தலைவர்.
1992 - பத்ம் விபூஷன் விருது
1993 - கான்பூர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம்.
1993 - 96 வெளியுறவுத்துறை குழு தலைவர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர்.
1994 - சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது.
1996 - பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது.
1996 - 7வது முறையாக மக்களவை உறுப்பினராக தேர்வு
1996 மே 16 முதல் 1996 ஜூன் 1 வரை பிரதமர். 
1996 - 1997 வரை எதிர்க்கட்சி தலைவர்
1997 - 98 - வெளியுறவத்துறை குழு தலைவர்
1998 - 8வது முறையாக மக்களவை உறுப்பினராக தேர்வு
1998 - 99- 2வது முறையாக பிரதமர். (மார்ச் 19 முதல் 1999 அக்டோபர் 10 வரை)
1999 - 9வது முறையாக மக்களவை உறுப்பினராக தேர்வு
1999 அக்டோர் 10 முதல் 2004 மே 22 வரை 3வது முறைாக பிரதமர்
2004 - 10வது முறையாக மக்களவை உறுப்பினராக தேர்வு.
2015 - பாரத ரத்னா விருது.
2015 - வங்கதேச விடுதலை போர் விருது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com