கேரளாவைப் போல் கோவாவும் பேரிடரைச் சந்திக்கும்: சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் கட்கில் எச்சரிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் கேரளாவைப் போல் கோவாவும் பேரிடர் சேதங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று சுற்றுச்சூழல்
கேரளாவைப் போல் கோவாவும் பேரிடரைச் சந்திக்கும்: சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் கட்கில் எச்சரிக்கை

பனாஜி: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் கேரளாவைப் போல் கோவாவும் பேரிடர் சேதங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் கட்கில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்குள் கேரளா, தமிழகம், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய பகுதிகள் வருகிறது. மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய இந்தமலைப்பகுதியில் மனிதர்களின் பேராசை, பணம் ஈட்டும் லாப நோக்கம், வர்த்தக நோக்கத்தில் இயற்கையை சூறையாடியதன் விளைவுதான் இன்று கேரளாவில் நிலச்சரிவு, பெருவெள்ளம் போன்ற மிகப்பெரிய இயற்கை சீற்றங்களை சந்திக்க நேரிட்டுள்ளது என்று மாதவ் கட்கில் குழு எச்சரித்திருந்தது.

இயற்கை வளங்களை அழித்து, சுரங்கப்பைதை மற்றும் கல்குவாரிகளை அமைப்பது, மரங்களை அழித்துபெரிய கட்டிடங்களைக் கட்டுவது, ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் அமைப்பது போன்றவற்றுக்கு கடுமையான தடைகளை அமல்படுத்த வேண்டும் என குழு பரிந்துரைத்தது. கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டது. ஆனால், அப்போது காங்கிரஸ் அரசும் அங்குள்ள குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மக்களும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில், கோவா குறித்தும் மாதவ் கட்கில் எச்சரிக்கை விடுக்கும் போது, “மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அனைத்து விதமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் இடர்பாடுகளும் தோன்ற ஆரம்பித்துள்ளன. கேரளா போல் உயரமான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி கோவாவில் இல்லாவிட்டாலும் கோவாவும் விழித்துக் கொள்ளவில்லையெனில் இதே பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.

சுற்றுச்சூழல் முன்னெச்சரிக்கையை முற்றிலும் புறந்தள்ளக் காரணம் பேராசையே. வரம்பற்ற லாபங்களுக்கான பேராசையே. கோவாவிலும் இதனைப் பார்த்து வருகிறோம். மத்திய அரசு அமைத்த நீதிபதி எம்.பி.ஷா கமிஷன் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளினால் சட்ட விரோத லாபங்களின் எண்ணிக்கையை மதிப்பிட்டுள்ளது. 

மேலும் குறைந்த மூதலீட்டில் பெரியளவில் கல்குவாரித் தொழிலிலும் ஏகப்பட்ட லாபங்கள் கிடைக்கின்றன. "பெரியளவிலான லாபத்திற்கான பேராசையால் தடுக்கப்படாத இந்தப் பேராசை லாபங்கள் அளிக்கும் தொழில்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வும் இடைவெளியும் அதிகரித்துள்ளது.

"எனவே இப்போது இந்த வழிகளில் எந்தவொரு பொறுப்புணர்வும் இன்றி கொள்ளை லாபம் ஈட்டுவோர், இத்தகைய பரவலான சட்டவிரோத நடவடிக்கையில் அரசாங்கம் அனுமதிக்கும் வகையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றார் காட்கில்.

சுற்றுச்சூழல் விதிமுறைகளை அமல்படுத்துவதில் அரசாங்கங்கள் தயக்கமில்லாமல் இருப்பதாக சுற்றுச்சூழல் எழுத்தாளர் தெரிவித்தனர்.

தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒழுங்காக செயல்படவில்லை என்பதை மத்திய அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.  

"மிகக் குறைந்த முதலீடு இருக்கும் போது கல் குவாரியில் வணிகத்தில் பெரும் இலாபம் உள்ளது," என்று அவர் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பரவலான மலை பற்றி தெரிவித்தார்.

கோவாவில் சுரங்கத்தொழிலினால் சுற்றுச்சூழல் பாதிப்பு என்ன என்பதை ஆராயுமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் 2011 ஆண் ஆண்டில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையில், இரும்பு தாது மற்றும் சுரங்க நிறுவனங்கத்தினால் ஏற்படும் நீராதார தாக்கம் குறித்த தரவுகளை மறைத்து வெளியிடப்பட்டது.

கோவா சமவெளிகளில் நிறைய நீரோட்டங்கள் உருவாகி உள்ளன. ஆனால், அதனை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையில் காட்டுவதேயில்லை. இந்த அறிக்கைகளில் அனைத்து வகையான தவறான அறிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன” என்று சாடினார்.

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு வெள்ளம் குறித்து கட்கலிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், கேரளாவின் மேற்குப் பள்ளத்தாக்கின் கீழ் உள்ள பல்வேறு பகுதிகளானது சுற்றுச்சூழல் ரீதியாக உணர்வூட்டக்கூடிய வகையில் வகைப்படுத்தப்பட வேண்டும் என்று 2011 அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், “ பொறுப்பற்றதனத்தோடு அனைத்துச் சுற்றுச்சூழல் கொள்கைகளையும் கையாண்டால் இப்படிப்பட்ட பேரிடர்களை சந்திக்கதான் நேரும். இந்த பாதிப்புகள் அனைத்தும் இயற்கையில் ஏற்பட்டவை அல்ல. மனிதத்தவறுகளே அனைத்துக்கும் காரணம் என்றார்.

மனிதர்களின் பேராசை, வனங்களையும், இயற்கைகயையும் அழித்ததே காரணம். அதிலும் குறிப்பாகக் குவாரிகளை வனப்பகுதிகளில் செயல்படுத்தியதே நிலச்சரிவுக்கும், மலைப்பகுதியில் மண் சரிவுக்கும்காரணம்” தெரிவித்தார்.

கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் சுரங்கப்பாதை, கல்குவாரிகளையும், மண்குவாரிகளையும் செயல்பட அனுமதித்ததும், பணம் ஈட்டும் நோக்கத்துடனும், வர்த்தக நோக்கிலும் வனங்களையும், இயற்கையையும் அழித்து ஹோட்டல்களையும், ரிசார்ட்களையும் கட்டியதும் சூழல் கெடுவதற்கும், இத்தகைய பேரழிவு ஏற்படுவற்கு முக்கியக் காரணமாகும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

சுரங்கப்பாதை மற்றும் குவாரிகளுக்காக காடுகளுக்கான நிலத்தை பயன்படுத்துவது குறித்து கடுமையான தடைகளை கொண்டுவர வேண்டும் என குழு பரிந்துரைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com