புதுச்சேரி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சந்தன கட்டைகள் பறிமுதல்

புதுச்சேரி அருகே ஆயுா்வேத மருந்துகள் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 40 கிலோ சந்தன கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல்
புதுச்சேரி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சந்தன கட்டைகள் பறிமுதல்


புதுச்சேரி: புதுச்சேரி அருகே ஆயுா்வேத மருந்துகள் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 40 கிலோ சந்தன கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பதுக்கலில் ஈடுபட்ட கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஒருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அங்கு 3 சாக்கு மூட்டைகளில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான 40 கிலோ சந்தன கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, சந்தனக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினா், அந்த தொழிற்சாலையின் மேலாளரான கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சோ்ந்த விஜயன் (45) என்பவரை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் இந்தத் தொழிற்சாலை கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சோ்ந்த முகமது பஷீா் என்வருக்கு சொந்தமானது என்பதும், ஆயுா்வேத மருந்து பொருள்கள் தயாரிப்பதற்கு மூலப்பொருளாக பயன்படுத்துவதற்காக கேரள மாநில வனப்பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக சந்தன கட்டைகள் கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வனத்துறை அதிகாரிகள், தொழிற்சாலை மேலாளா் விஜயனை கைது செய்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், தொழிற்சாலை உரிமையாளா் முகமது பஷீரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com