தீவிரவாதிகள் சுட்டதில் பின்வயிற்றில் குண்டு பாய்ந்தும் குழந்தை பெற்ற கர்ப்பிணி பெண்!

தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் பின்வயிற்றில் குண்டு பாய்ந்த கர்ப்பிணி பெண் 2.5 கிலோ குழந்தையை பெற்றெடுத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.  
தீவிரவாதிகள் சுட்டதில் பின்வயிற்றில் குண்டு பாய்ந்தும் குழந்தை பெற்ற கர்ப்பிணி பெண்!

புதுதில்லி: தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் பின்வயிற்றில் குண்டு பாய்ந்த கர்ப்பிணி பெண் 2.5 கிலோ குழந்தையை பெற்றெடுத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.  

காஷ்மீர் அருகே இருக்கும் சுஞ்வான் பகுதியில் நேற்று தீவிரவாத தாக்குதல் நடந்து இருக்கிறது. அதிகாலை தீவிரவாதிகள் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சுஞ்வான் பகுதியில் இந்திய ராணுவத்தின் 36ஆவது படைப்பிரிவு முகாம் உள்ளது. இங்கு ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் வசிக்கும் குடியிருப்பும் அமைந்துள்ளது. இந்த முகாமுக்குள் நேற்று சனிக்கிழமை அதிகாலை 4.55 மணியளவில் புகுந்த ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் புகுந்தனர். இதை முகாமின் நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் கண்டுபிடித்து, பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

எனினும், ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி, குடியிருப்புப் பகுதியில் இருக்கும் வீடுகளுக்குள் தீவிரவாதிகள் நுழைந்தனர். பின்னர் அங்குள்ள வீடுகளுக்குள் மறைந்திருந்தபடி, ராணுவ வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், இளநிலை அதிகாரிகள் மதன்லால் சௌதரி, முகமது அஸ்ரஃப் மிர் ஆகியோர் உயிரிழந்தனர். ராணுவ மேஜர் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இரு தரப்பினருக்கிடையே நடந்த தாக்குதலில் குடியிருப்புப் பகுதியில் இருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பின்வயிற்றில் குண்டு பாயந்திருந்த நிலையில், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருந்த குழந்தையை முதலில் வெளியே எடுப்பதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு 2.5 கிலோ குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்து குண்டுகள் அகற்றப்பட்டுள்ளது. 

தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

1989 முதல் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினர்களுக்கிடையே கொரில்லா போர் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com