ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி  ஆயுள் தண்டனை கைதிகளை முன் கூட்டியே  விடுதலை
ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு

சென்னை: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி  ஆயுள் தண்டனை கைதிகளை முன் கூட்டியே  விடுதலை செய்வதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார். 

தமிழக சிறைகளில் கடந்த சில ஆண்டுகளாகவே அண்ணா பிறந்த தினம், காந்தி ஜெயந்தி போன்ற தலைவர்கள் பிறந்த நாட்களில் நன்னடத்தை கைதிகள் விடுவிக்கப்படவில்லை. இதனால் தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 31ம் தேதி திண்டுக்கல்லில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘ஆயுள் தண்டனை பெற்று தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வரும் சிறை கைதிகளை சட்டத்துக்கு உட்பட்டும், சிறை விதிகளுக்கு உட்பட்டும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என்று அறிவித்தார்.

இந்த பட்டியலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், பேரறிவாளன், சாந்தன், பெண்கள் சிறையில் உள்ள நளினி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஆனால், இவ்விஷயத்தில் நாங்கள் தன்னிச்சையாக ஏதும் செய்ய முடியாது.

அரசிடம் நாங்கள் அனுப்பி வைத்த பட்டியலில் உள்ளவர்கள் குறித்து நன்னடத்தை அதிகாரிகள் பரிசீலித்து யாரை விடுதலை செய்ய வேண்டும் என்று இறுதி செய்து உத்தரவிட்ட பிறகே முடிவு செய்யப்படும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி  ஆயுள் தண்டனை கைதிகளை முன் கூட்டியே  விடுதலை செய்வதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.  

அந்த மனுவில்  விடுதலை குறித்த அரசாணையில் உள்ள விதிகளில் ஒன்றான '435 பிரிவின் கீழ் விடுதலை செய்யமாட்டோம்' என்பதை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு வழக்கின் பின்னணியை ஆராயக் கூடாது; முன்கூட்டியே விடுதலை செய்யும் நடைமுறையை  அனைத்து கைதிகளையும் சமமாக அமல்படுத்த  வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com