எண்ணெய் நிறுவனங்களுடன் எல்.பி.ஜி. லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

மும்பையில் எண்ணெய் நிறுவனங்களுடன், எல்.பி.ஜி. லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
எண்ணெய் நிறுவனங்களுடன் எல்.பி.ஜி. லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

மும்பையில் எண்ணெய் நிறுவனங்களுடன், எல்.பி.ஜி. லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் வேலைநிறுத்தம் தொடரும் என தென்மண்டல எல்.பி.ஜி.லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளன. 

எண்ணெய் நிறுவங்களுக்கும் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்குமான ஒப்பந்த காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய டெண்டருக்கான அறிவிப்பு கடந்த 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் இனிவரும் காலங்களில் டெண்டர் மாநில அளவில் மட்டுமே நடத்தப்படும் என்றும், அந்தந்த மாநில பதிவெண் கொண்ட லாரிகள் மட்டுமே பங்கேற்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. அதில் புதிய டெண்டர் அறிவிப்பை திரும்ப பெறக்கோரி, 12ஆம் தேதி காலை 6 மணி முதல் தென் மாநிலம் முழுவதும் உள்ள எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் மும்பையில் எண்ணெய் நிறுவனங்களுடன், எல்.பி.ஜி. லாரி உரிமையாளர்கள் இன்று பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் வேலைநிறுத்தம் தொடரும் என தென்மண்டல எல்.பி.ஜி.லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com