தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்: 201 பேர் வேட்புமனு தாக்கல் 

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. 
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்: 201 பேர் வேட்புமனு தாக்கல் 

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. 

தமிழ்நாடு பார்கவுன்சில் தேர்தல் மார்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கையை கடந்த மாதம் 25-ஆம் தேதி தேர்தலை நடத்தும் சிறப்புக்குழு வெளியிட்டது. மேலும், தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றி இருக்க வேண்டும், எந்த அரசியல் கட்சிகளிலும் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் இருக்கக்கூடாது என்பது உள்ளிட்ட சிறப்புக்குழுவால் இயற்றப்பட்ட 9 தீர்மானங்களும் விதிகளாக வெளியிட்டன.


இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேல் வழக்குரைஞர்களாக பணிபுரிந்தவர்கள் தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் முருகேந்திரன் மற்றும் செல்வக்குமார் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர்.


இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது. இதற்கிடையில் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.  25 உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிட இதுவரை 201 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com