பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு

பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டமான 'மேக்ஸிமம்' வாய்ப்பை  அறிவித்துள்ளது.
பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு

பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டமான 'மேக்ஸிமம்' வாய்ப்பை  அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: -

புதிய ப்ரீபெய்ட் திட்டத்தில் விலை ரூ.999/- ஆகும். ரீ-சார்ஜ் செய்த தேதி முதல் - இரண்டு தொகுப்புகளாக ஒரு வருடம் முழுவதும் நன்மைகளை அளிக்கும்.

இந்த புதிய மேக்ஸிமம் திட்டமானது என்.இ ஜம்மு & காஷ்மீர் மற்றும் அசாம் தவிர அனைத்து வட்டாரங்களிலும் பொருந்தும். இந்த திட்டம் குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் தரவு நன்மைகளை வழங்குகிறது. 

பி.எஸ்.என்.எல்  நிறுவனத்திடமிருந்து வெளியாகியுள்ள இந்தத் திட்டம் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவற்றின் நீண்டகால செல்லுபடியாகும் திட்டங்களுடன் கடுமையாக போட்டி போடுகிறது. 

'மேக்ஸிமம்' திட்டத்தின் நன்மைகள் பி.எஸ்.என்.எல் - ன் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இந்த திட்டம் ஒரு நாளைக்கு 1-ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. 

மும்பை மற்றும் தில்லி தவிர்த்து ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற இலவச குரல் அழைப்புகளையும் வழங்குகிறது. இதில் 1ஜிபி என்கிற வரம்பை தாண்டிய பின்னர் இணைய வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com