கேரள மாநிலத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தக்கோரி 3-வது நாளாக தனியார் பேருந்து நிறுவனங்கள் வேலைநிறுத்தம்

கேரள மாநிலத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தக்கோரி 3-வது நாளாக தனியார் பேருந்து நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. 

கேரளத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை அந்த மாநில அரசு உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

அதன்படி சாதாரண பஸ் சேவைகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ. 7 முதல் ரூ. 8 ஆகவும் பயணிகள் பஸ்கள் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயிலிருந்து 11 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

பேருந்து கட்டணத்தை கேரள அரசு உயர்த்தியிருப்பதற்கு காங்கிரஸ் தலைமையில் செயல்படும் எதிர்க்கட்சிகள் கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில் சாதாரண பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.10 ஆக உயர்த்த வேண்டும் எனக்கோரியும்   பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சலுகை கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் 3-வது நாளாக தனியார் பேருந்து நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com