பாஜகவுடன் அதிமுகவுக்கு அரசியல் உறவு இல்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பாஜகவுடன் அதிமுகவுக்கு அரசியல் உறவு இல்லை என்றும் அரசாங்க ரீதியாக நிர்வாக நடவடிக்கைகளுக்கான உறவு மட்டுமே உள்ளது என தமிழக பால்
பாஜகவுடன் அதிமுகவுக்கு அரசியல் உறவு இல்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பாஜகவுடன் அதிமுகவுக்கு அரசியல் உறவு இல்லை என்றும் அரசாங்க ரீதியாக நிர்வாக நடவடிக்கைகளுக்கான உறவு மட்டுமே உள்ளது என தமிழக பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 

திருச்சியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி கூறியதால்தான் அதிமுகவில் இணைந்து பிரிந்த அணிகளை ஒன்றுபடுத்தியாகவும், அமைச்சர் பதவியேற்றதாகவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக பத்திரிகையாளர்கள்தான் கூறுகின்றனர். நான் அதனை பார்க்கவில்லை. ஏதாவதொரு விழா மேடையில் எதார்த்தமான பேச்சாகவும் இருந்திருக்கலாம். ஊடகங்கள்தான் அரசியலாக பார்த்து வருகின்றன. 

அதிமுகவுக்கு பாஜகவுடன் எந்தவித அரசியல் உறவும் இல்லை. அரசாங்க ரீதியாக நிர்வாக நடவடிக்கைகளுக்கான உறவு மட்டுமே உள்ளது. எனவே, எதனையும் அரசியலாக்க வேண்டாம். 

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அரசு பதவியில் இருந்து விமர்சனம் செய்ய முடியாது. ஆவின் நிறுவனத்துக்கு எதிராகவோ, அரசுக்கு எதிராகவோ எந்த பால்முகவர்கள் சங்கமும் இல்லை. ஒருசிலர் காழ்ப்புணர்ச்சியாக செயல்படுவதற்கு தொடர்ந்து கருத்துக் கூற முடியாது. ஆவின் நிறுவனம் சிறப்பாக இயங்கி வருகிறது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஓராண்டை வெற்றிகரமாக முடித்துள்ளது. மீதமுள்ள மூன்றரை ஆண்டுகளும் ஆட்சி செய்யும். பாஜகவுடனான கூட்டணி குறித்து முதல்வரும், துணை முதல்வரும் முடிவு எடுப்பார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com