பங்குச்சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 141.27  புள்ளிகள் உயர்ந்து
பங்குச்சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் உயர்வு

மும்பை : மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 141.27  புள்ளிகள் உயர்ந்து 33,844.86 புள்ளிகளாக உள்ளன. அதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 37.05  புள்ளிகள் உயர்ந்து 10,397.45 புள்ளிகளாக இருந்தன. 

கடந்த மூன்று நாள் வர்த்தகத்தில் குறியீடு 593.88 புள்ளிகளாக சரிந்துள்ளதையடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 207.77 புள்ளிகள் உயர்ந்து 33,911.36 புள்ளிகளாக வர்த்தக நேர் தொடக்கத்தில் இருந்தது. 

டாக்டர் ரெட்டிஸ், டிசிஎஸ், இன்போசிஸ், எச்டிஎப்சி, பார்தி ஏர்டெல், ஐடிசி, விப்ரோ மற்றும் ஆர்ஐஎல் போன்ற நிறுவன பங்குகள் விலை 0.91% வரை அதிகரித்திருந்தது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஹாங்காங்கின் ஹாங் செங் 1.15% மற்றும்ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.64% உயர்ந்து காணப்பட்டது. சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு பங்குச்சந்தைகளுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com