பிரதமர் நரேந்திர மோடி ஊழலின் கருவி: ராகுல் கடுமையான விமர்சனம்

வருகிற 27-ந்தேதி மேகாலயாவில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலுக்ககாக ராகுல் காந்தி தற்போது பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 
பிரதமர் நரேந்திர மோடி ஊழலின் கருவி: ராகுல் கடுமையான விமர்சனம்

வருகிற 27-ந்தேதி மேகாலயாவில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலுக்ககாக ராகுல் காந்தி தற்போது பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

மேகாலயா மாநிலத்தில் 60 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 27-ந்தேதி நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்கு பிரசாரம் செய்தார். மென்டிபாதர் பகுதியில் அவர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி ஊழலின் கருவி என்று கடுமையாக விமர்சித்தார். 

மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் ரூ.11,400 கோடி மதிப்பிலான பண மோசடி தொடர்புடைய வைர வியாபாரி நிரவ்மோடி ரூ.22 ஆயிரம் கோடியுடன் வெளி நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்பதை பிரதமர் அறிந்து அடுத்த வெளிநாட்டு பயணத்தின் போது, நமது அனைவர் சார்பாகவும் அவரை பிரதமர் அழைத்து வர வேண்டும் என்றார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் மன்கிபாத் உரையில் ஊழல் குறித்த எதிர்பார்த்து இருப்பதாகவும் கூறினார். நான் கடந்த மாதம் வைத்த கோரிக்கையை மோடி ஏற்கவில்லை. உண்மையில் பிரதமர் தன் மன்சாட்சியை கேட்டுப் பார்க்க வேண்டும் மனதின் குரல் நிகழ்ச்சியில் மற்ற விசயங்களை பேசுவதை விட பஞ்சாப் வங்கி மோசடி ரபேல் ஒப்பந்தம் ஊழல் குறித்து நீங்கள் பேசுவதையே மக்கள் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர் என்று ராகுல் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com