சிவகங்கையில் அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி: வழக்குரைஞர்கள் 6 பேர் கைது 

சிவகங்கையில் வழக்குரைஞர்கள் தாக்கியதால் மனமுடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், மரண வாக்குமூலம் எழுதி வைத்து விட்டு பூச்சி மருந்து
சிவகங்கையில் அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி: வழக்குரைஞர்கள் 6 பேர் கைது 

சிவகங்கையில் வழக்குரைஞர்கள் தாக்கியதால் மனமுடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், மரண வாக்குமூலம் எழுதி வைத்து விட்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக, 6 வழக்குரைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் நீதிமன்றங்களுக்கு செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி வழக்குரைஞர்கள் நேற்று வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். 

பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சிவகங்கை மாவட்ட வழக்குரைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர்  பழனிச்சாமி, மாவட்டச் செயலர் குரு.தங்கப்பாண்டியன், பொருளாளர்  வசந்தகுமார், துணைச் செயலர்  இளையராஜா ஆகியோர் தலைமையில் ஏராளமான வழக்குரைஞர்கள் கலந்து  கொண்டனர்.  

மறியல் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பேருந்து நிலையத்திலிருந்து, திருச்சி செல்லும் அரசுப் பேருந்தை ஓட்டுநர் செல்வராஜ் என்பவர் இயக்கினார். அந்தப் பேருந்தை வழக்குரைஞர் குரு.தங்கப்பாண்டியன் தடுத்து நிறுத்த முற்பட்ட போது, அவர் கீழே விழுந்தார். இதனால், லேசான காயமடைந்த அவர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். 

இதனையறிந்த மற்ற வழக்குரைஞர்கள், பேருந்து ஓட்டுநர் செல்வராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுநர் செல்வராஜ் தாக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்த போலீஸார், செல்வராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், வழக்குரைஞர்கள் தாக்கியதால் மனமுடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், மரண வாக்குமூலம் எழுதி வைத்து விட்டு பூச்சி மருந்து குடித்தவர் மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

இதனிடையே அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிவகங்கை நகர காவல்நிலைய போலீஸார், வழக்குரைஞர்கள் சங்க செயலாளர் குருதங்கப்பாண்டியன், மதி, ராஜாராம், செந்தில்குமார், வீரசிங்கம், வால்மீகநாதன் ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com