சீனாவில் 2 முறை மட்டுமே அதிபர் பதவி: நிபந்தனையை நீக்க சீன ஆளும்கட்சி முடிவு

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய தலைமை குழு மாநாடு நாளை தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது. 
சீனாவில் 2 முறை மட்டுமே அதிபர் பதவி: நிபந்தனையை நீக்க சீன ஆளும்கட்சி முடிவு

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய தலைமை குழு மாநாடு நாளை தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது. 

சீனாவின் அதிபராக தற்போது பதவி வகித்துவரும் ஜி ஜின்பிங் கடந்த 2013-ம் ஆண்டு சீனாவின் ஆளும்கட்சி தலைவராகவும், அந்நாட்டின் அதிபராகவும், முப்படைகளின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். நாளை நடைபெற உள்ள மாநாட்டில், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ‘பத்தாண்டுகள் வரை ஆட்சி செய்து இரண்டாவது பதவிக் காலத்தை நிறைவு செய்தவர்கள் அடுத்து மூன்றாவது முறையாக அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தல்களில் போட்டியிட கூடாது’ என்னும் நிபந்தனையை நீக்கம் செய்யப் போவதாக கட்சி மேலிடம் இன்று அறிவித்துள்ளது.

இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால் 2022-ம் ஆண்டையும் கடந்து சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் ‘அசைக்க முடியாத சக்தியாக’ தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com