அணு ஆயுதங்களை இயக்கும் பொத்தான் எப்பொழுதும் எனது மேஜை மீதே உள்ளது: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை

அணு ஆயுதங்களை இயக்கும் பொத்தான் எப்பொழுதும் எனது மேஜை மீது உள்ளது என வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
அணு ஆயுதங்களை இயக்கும் பொத்தான் எப்பொழுதும் எனது மேஜை மீதே உள்ளது: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை

சியோல்: அணு ஆயுதங்களை இயக்கும் பொத்தான் எப்பொழுதும் எனது மேஜை மீது உள்ளது என வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

வடகொரியா ஏவுகணை பரிசோதனை மற்றும் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐ.நா. அமைப்பு அந்நாட்டுக்கு பொருளாதார தடையும் விதித்தது.

ஆனால், எதனையும் கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனையில் வடகொரியா ஈடுபட்டு வந்தது.  அமெரிக்காவின் மைய பகுதியை தாக்கும் வலிமை எங்களிடம் உள்ளது என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கிம் ஜோங்-உன் கூறியுள்ளார். 

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தொலைக்காட்சியில் அதிபர் கிங் ஜோங் உன் உரையாற்றுகையில், வடகொரியாவுக்கு எதிராக போர் தொடங்க அமெரிக்க அரசால் முடியாது.  அமெரிக்காவின் முழு நிலப்பகுதியும் நமது அணு ஆயுதங்களின் எல்லைக்குள் உள்ளது. அணு ஆயுதங்களை இயக்கும் பொத்தான் எப்பொழுதும் எனது மேஜை மீதே உள்ளது. இதுவொரு அச்சுறுத்தல் அல்ல, மாறாக ஒரு உண்மை என்பதை உணர வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், வட கொரியா "ஒரு சமாதானத்தை நேசிக்கும் ஒரு பொறுப்புமிக்க அணுகுண்டு" என்றும், அதற்கு எதிராக "அமெரிக்கா ஒரு போரை நடத்த முடியாது" என்றும் அறிவித்தார். "எங்களுக்கு எதிராக ஆக்கிரமிப்பு இல்லாத வரை நாங்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த விரும்பவில்லை என்று கிங் ஜோங்-உன் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com