ஜெயலலிதா வழங்கிய இன்னோவா காரை அதிமுகவிடம் மீண்டும் ஒப்படைக்கிறார் நாஞ்சில் சம்பத்!

டிடிவி தினகரன் தலைமையை ஏற்ற நாஞ்சில் சம்பத்துக்கு அதிமுக அளித்த இன்னோவா காரை திரும்ப கேட்டதால் அதிமுகவிடமே காரை ஒப்படைக்க
ஜெயலலிதா வழங்கிய இன்னோவா காரை அதிமுகவிடம் மீண்டும் ஒப்படைக்கிறார் நாஞ்சில் சம்பத்!

டிடிவி தினகரன் தலைமையை ஏற்ற நாஞ்சில் சம்பத்துக்கு அதிமுக அளித்த இன்னோவா காரை திரும்ப கேட்டதால் அதிமுகவிடமே காரை ஒப்படைக்க நாஞ்சில் சம்பத் முடிவெடுத்துள்ளார். 

கடந்த 2012-ஆம் ஆண்டு மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத். அப்போது, கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியுடன் இன்னோவா கார் ஒன்றையும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். பின்னர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா தலைமையை முதலில் சம்பத் ஏற்கவில்லை.

அதிமுகவில் தொடருவது பற்றிய கேள்விக்கு, இன்னும் அது பற்றி முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்த நாஞ்சில் சம்பத், கட்சியில் இருந்து விலகப்போவதாகவும் ஜெயலலிதா அளித்த காரை கட்சியிடம் ஒப்படைக்க போவதாக கூறினார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தனக்கு வழங்கிய இன்னோவா காரை, கடந்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி காலை அதிமுக தலைமைக் கழகத்தில் விட்டுச் சென்றார் நாஞ்சில் சம்பத். இது குறித்து அவர் தனது முகநூலில் கூறியிருப்பதாவது, "2012ம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி இயக்க பிரச்சாரத்திற்காக கழகத்தின் பொருளாளர் பெயரில் வாங்கப்பட்ட கார் என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அம்மா அவர்கள் சாவியை என்னிடத்தில் ஒப்படைத்தார்கள். அந்த காரை கட்சியின் பிரச்சாரத்தைத் தவிர என்னுடைய சொந்த உபயோகத்திற்காக ஒரு நாள் கூட பயன்படுத்தவில்லை. பிரச்சாரம் இல்லாத நாட்களில் என்னுடைய நண்பர் ஜாபர் அலி வீட்டில் பாதுகாப்பாக நிற்கும். இப்போது 8 மாத காலமாக பிரச்சாரம் இல்லை. வீணாக அதை வைத்துக் கொண்டு இன்னோவா சம்பத் என பழியும் சுமந்து கொண்டு எதற்காக இருக்க வேண்டும் என்று எண்ணி இன்று காலை தலைமைக் கழகத்தில் ஒப்படைத்துவிட்டேன்" என்று முகநூலில் பதிவிட்டிருந்தார்.  

ஆனால், மறுநாளே அவர் சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு அளித்ததுடன் காரையும் ஒப்படைக்காமல் காரை அவரே வைத்திருந்தார். 

இந்நிலையில், அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் கை ஒங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்திடம் உள்ள இன்னோவா காரை திரும்ப ஒப்படைக்குமாறு கட்சி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதையடுத்து நாளை அல்லது நாளை மறுநாள் கட்சி தலைமையிடம் மீண்டும் காரை திரும்ப ஒப்படைக்க நாஞ்சில் சம்பத் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com