இன்றைய டிஜிட்டல் உலகம் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது: உலகப்பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரை

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடக்கும் உலகப்பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்
இன்றைய டிஜிட்டல் உலகம் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது: உலகப்பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரை

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடக்கும் உலகப்பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்

உங்கள் அனைவருடனும் இணைந்து இந்த மாநாட்டில் பங்கேற்க இங்கு வந்துள்ளதை எண்ணி நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்தமுறை 1997-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் இந்த மாநாட்டில் பங்கேற்றபோது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களை எட்டி இருந்தது. தற்போது அது ஆறு மடங்காக உயர்ந்துள்ளது.

இன்றைய டிஜிட்டல் உலகம் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது. இன்றைய உலகத்தை சமூக வலைதளங்கள் மாற்றிய அமைத்துள்ளன. தொழில்நுட்ப மாற்றம் உலக நாடுகளை மாற்றி உள்ளது. இணையமும் தொழில்நுட்பமும் அதிக சக்தி வாய்ந்தவையாக மாறியுள்ளது. இணைய மற்றும் அணு ஆயுத பாதுகாப்பும் மிக முக்கியமானவை. தகவல்களை கையாள்பவர்களுக்கு எதிர்காலம் சிறந்ததாக அமையும்.

மேலும் பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் மற்றும் மனிதர்களின் சுயநல இயல்பு ஆகிய இவை மூன்றும் மனிதகுலம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய சவால்களாக இருக்கின்றன. சுற்றுச்சூழலை பாதுகாப்பது இந்தியாவின் கலாசாரமாகும். எங்கள் தேசப்பிதா மகாத்மா காந்தி சுரண்டல் மற்றும் பேராசைகளை எதிர்த்து வந்தார். ஆனால், பேராசையின் அடிப்படையிலான நுகர்வின் பக்கம் நாம் எப்படி திரும்பினோம்? நேர்மையான முறையில் நாம் ஒன்றாக கைகோர்த்து நடந்தால் முன்னேற்றம் என்பது சாத்தியமாகும். அனைவரையும் சேர்த்துகொண்டு முன்னேறுங்கள். அனைவருக்காகவும் முன்னேறுங்கள்.

வளரும் நாடுகளுக்கு, எத்தனை நாடுகள் உதவுகின்றன. வளர்ந்த நாடுகள் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் மற்றும் இயற்கை இடையே மோதல் வலுத்து வருகிறது. 
நாம் பூமி அன்னையின் குழந்தைகள். நமக்குள் ஏன் சண்டையிட வேண்டும். நாம் பேராசை படக்கூடாது. தேவைக்கு ஏற்ப இயற்கை வளங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.  புதுப்பிக்கத்தக்க சக்தியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆயர்வேதத்தையும் யோகாவையும் உலகிற்கு இந்தியா வழங்கியுள்ளது.

இந்தியாவிற்கும் உலகிற்கும் பயங்கரவாதம் பெரிய கவலையாக உள்ளது. பயங்கரவாதத்தை விட அதனை உற்பத்தி செய்யும் நாடுகள் மோசமானவை. பயங்கரவாதிகளில் நல்லவர்கள் கெட்டவர்கள் என யாரும் இல்லை. பயங்கரவாதிகளை பிரித்து பார்ப்பது அபாயகரமானது என்று கூறினார். 

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com