பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண், 341.97 புள்ளிகள் உயர்ந்து,
பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் உயர்வு

மும்பை:  மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண், 341.97 புள்ளிகள் உயர்ந்து, 36,139.98 புள்ளிகளாக இருந்தன. அதேபோல் தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 117.50 புள்ளிகள் உயர்ந்து  11,083.70 புள்ளிகளாக உள்ளன. 

நிஃப்டி மெட்டல் 4.07 சதவீதமும், நிஃப்டி பிஎஸ்யு வங்கி 3.97 சதவீதமும் உயர்ந்ததால், உலோகம், வங்கி பங்குகள் சரிவைச் சந்தித்தன.

பிஎஸ்இயில் அனைத்து துறை சார்ந்த குறியீடுகள் உயர்ந்தன. விப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஆசிய பீஸ்ட்ஸ், ஹெச்.டி.எப்.சி வங்கி ஆகியவை மிகப்பெரும் லாபகரமாக இருந்தன. ஐசிஐசிஐ வங்கி, எஸ்.பி.ஐ, டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன. 

வர்த்தக நேர முடிவில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 63.83 ஆக இருந்தது. நேற்று வர்ததக நேரமுடிவில் 63.87 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com