ஜப்பானில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 88 ஆக உயர்வு

ஜப்பானில் தொடர்ந்து பெய்து வரும் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 88 ஆக உயர்துள்ளது. 
ஜப்பானில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 88 ஆக உயர்வு

ஜப்பானில் தொடர்ந்து பெய்து வரும் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 88 ஆக உயர்துள்ளது. 

ஜப்பான் தெற்குப் பகுதியில் உள்ள ஹிரோஷிமா மாகணத்தில் கடந்த மூன்று நாள்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால், மாகாணத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில், 48 பேரின் இறப்பு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 100-க்கும் அதிகமாக உள்ளது.

ஹிரோஷிமா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அங்கு கடுமையான பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது முற்றிலும் முடங்கிப்போயுள்ளது.

மீட்கப்படுவோர் கியோட்டோ, ஹிரோஷிமா மற்றும் யமகுஷி ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஜப்பானில் உள்ள பகுதிகளில் இருந்து 2.3 மில்லியன் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

மீட்பு நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள ஏதுவாக 40-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் அதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 48 ஆயிரம் அவசரகால மீட்பு படையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளனர்.

கனமழை குறித்து ஜப்பான் வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த மூன்று நாட்களாக சுமார் 620 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த 1976-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த அளவுக்கு மழைபெய்துள்ளது இதுவே முதல் முறை. கனமழை தொடர்ந்து நீடிக்கவே அதிக வாய்ப்புள்ளது. எனவே கியூஷு மற்றும் ஷிகோஷு தீவுகளில் புதிய புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மீட்பு பணிகள் குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்úஸூ அபே கூறியுள்ளதாவது: நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் அனைவரும் நேரத்துடன் போராடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை வேகமாக மீட்டு வருகின்றனர். தம்மால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மீட்பு குழுவினர் தங்களின் உயிரை பணயம் வைத்து பாதிக்கப்பட்டவர்களை மீட்க துரித கதியில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com