இந்து பாகிஸ்தான் என்ற கருத்தில் பின்வாங்கப் போவதில்லை: சசி தரூர் திட்டவட்டம்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்ற கருத்தை பின்வாங்கப் போவதில்லை என
இந்து பாகிஸ்தான் என்ற கருத்தில் பின்வாங்கப் போவதில்லை: சசி தரூர் திட்டவட்டம்

திருவனந்தபுரம்: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்ற கருத்தை பின்வாங்கப் போவதில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் 2019 மக்களவைத் தேர்தலில் ''பாஜக மீண்டும் வெற்றி பெறுமானால், இந்தியா ஹிந்து பாகிஸ்தானாக மாறிவிடும்'' என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியிருந்தார். இது அரசமைப்புச் சட்டம் மற்றும் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று பாஜக குற்றம்சாட்டிய அதே வேளையில், தரூரின் கருத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், சசி தரூரின் கருத்து சர்ச்சைக்குரியது என்றால், ராமனே வந்தாலும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து விட முடியாது என உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திர நாராயணன் சிங் பேசியதற்காக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா மன்னிப்பு கேட்பாரா? என்றும் சிவசேனை கேள்வி எழுப்பி இருந்தது.  

இந்நிலையில், சசி தரூரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த பாஜகவினர், திருவனந்தபுரத்தில் உள்ள தரூரின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுகுறித்து தரூர் டுவிட்டரில் பதிவில், திருவனந்தபுரத்தில் உள்ள தமது அலுவலகத்தை பாஜகவினர் தாக்கி சேதப்படுத்தியதாகவும், தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற செயல்கள், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் காங்கிரஸ் எப்போதுமே மத பிரச்னையில் இருந்து விலகி இருக்க முயற்சிக்கிறது என்றவர் இந்து பாகிஸ்தான் என்ற கருத்தில் இருந்து தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

தேக்க நிலையில் உள்ள பொருளாதார வளர்ச்சி, உணவு பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, ஏற்றுமதி மற்றும் உற்பத்தி சரிவு ஆகியவற்றின் காரணமாக, எதிர்வரும் தேர்தல்களில் ஆளும் கட்சிக்கு வாக்காளர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com