நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த நிறுவனத்தில் 2வது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த நிறுவனம், அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் வருமான வரித்
நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த நிறுவனத்தில் 2வது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த நிறுவனம், அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

கமுதி அருகே கீழமுடிமன்னார் கோட்டையைச் சேர்ந்தவர் செய்யாத்துரை, தனது 4 மகன்களுடன் எஸ்.பி.கே. அண்ட் கோ என்ற பெயரில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த நிறுவனம், கல்குவாரி, நூற்பாலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இந்த நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. 

இதையடுத்து வருமான வரித்துறையினர், செய்யாத்துரை தொடர்புடைய நிறுவனங்களில் நேற்று திங்கள்கிழமை காலை 6 மணியளவில் ஒரே நேரத்தில் அருப்புக்கோட்டை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள உறவினர் தீபக் வீடு, அபிராமபுரம், கோவிலம்பாக்கம், முகப்பேர் மேற்கு, நொளம்பூர், அபிராமபுரம், பெசன்ட் நகர், குரோம்பேட்டை, சூளைமேடு மேத்தாநகர், பெரம்பூர், தாம்பரம், சேத்துப்பட்டில் உள்ள உறவினர் வீடுகள், அலுவலகங்கள் என 30 இடங்களில் சோதனை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த நிறுவனம், அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.110 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இச்சோதனையில் 70-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சோதனை நடைபெற்ற இடங்களில் பறிமுதலான பணம் நகைகளைக் கணக்கிடும் பணியில் வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பணம் எண்ணும் இயந்திரம், தங்கத்தின் தரம், எடையை கண்டறியும் இயந்திரத்துடன் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக சென்னை மற்றும் அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த நிறுவனம், அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com