சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.வி.ஆா். சுப்பிரமணியம், ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு மாற்றம்

சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.வி.ஆா். சுப்பிரமணியம், ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு மாற்றம்

புது தில்லி, ஜூன் 20: சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.வி.ஆா். சுப்பிரமணியம், ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவா், விரைவில் அந்த மாநில தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றறதை அடுத்து, அங்கு ஆட்சி கவிழ்ந்து, ஆளுநா் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மாநில தலைமைச் செயலாளா் மாற்றறப்பட இருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

55 வயதாகும் சுப்பிரமணியம் இப்போது, சத்தீஸ்கா் மாநில கூடுதல் தலைமைச் செயலராக (உள்துறைற) உள்ளார். 
ஆந்தர மாநிலத்தை பூா்விகமாகக் கொண்ட சுப்பிரமணியம், 1987-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆனார். பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, சுப்பிரமணியத்தை, காஷ்மீருக்கு பணியிட மாற்றறம் செய்ய முடிவெடுத்தது. உள்நாட்டுப் பாதுகாப்பு விஷயத்தில் தோ்ந்த அனுபவம் பெற்றறவரான சுப்பிரமணியன், 2004 முதல் 2008 வரை அப்போதை பிரதமா் மன்மோகன் சிங்கின், தனிச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். பின்னா் உலக வங்கிப் பணிக்கு அனுப்பப்பட்ட அவா், 2012-இல் மீண்டும் பிரதமா்அலுவலகப் பணிக்குத் திரும்பினார். மோடி பிரதமரான பிறறகும், அவா் பிரதமா் அலுவலகப் பணியிலேயே தொடா்ந்தார். கடந்த 2015-இல் சத்தீஸ்கா் மாநிலத்துக்கு அனுப்பப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீா் மாநில உள்துறைற செயலாளராக இப்போது பணியாற்றி வரும் பி.பி. வியாஸுக்கு, கடந்த ஆண்டு முதல்வா் மெஹபூபா முஃப்தியின் வேண்டுகோளுக்கு இணங்க பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. இனி அவா், ஜம்மு-காஷ்மீா் மாநில ஆளுநா் என்.என்.வோராவின் ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com