இந்தோனேஷியாவில் ஆகங் எரிமலை வெடித்து சிதறல்: பாலி சர்வதேச விமான நிலையம் மூடல் 

இந்தோனேஷியாவின் பாலி நகரில் ஆகங் எரிமலை வெடித்து சிதறுவதால் சாம்பல் வெளியேறி வருவதை அடுத்து பாலி சர்வதேச விமான
இந்தோனேஷியாவில் ஆகங் எரிமலை வெடித்து சிதறல்: பாலி சர்வதேச விமான நிலையம் மூடல் 

ஜகர்த்தா: இந்தோனேஷியாவின் பாலி நகரில் ஆகங் எரிமலை வெடித்து சிதறுவதால் சாம்பல் வெளியேறி வருவதை அடுத்து பாலி சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. 

இந்தோனேஷியாவின் வடகிழக்கில் ஆகங் எரிமலை கடந்த ஆண்டு முதல் குமுறி கொண்டு இருந்துள்ளது. இதனால் கடந்த டிசம்பரில் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. அதனை சுற்றியிருந்த ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆண்டு இறுதியில் இயல்புநிலைக்கு திருப்பியதும் மீண்டும் விமான நிலையம் செயல்படத் தொடங்கியது. 

இந்நிலையில், ஆகங் எரிமலை வெடித்து சிதறுவதால், அதில் இருந்து 2,500 மீட்டர் (8,200 அடி) உயரத்திற்கு சாம்பல் புகை மற்றும் செந்நிறத்தில் நெருப்பும் காணப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனால் சர்வதேச விமான நிலையம் இன்று வெள்ளிக்கிழமை மூடப்பட்டதால், 38 சர்வதேச விமானங்கள், 10 உள்நாட்டு விமானங்களும் என 40 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான சேவை ரத்தால் 8,334 பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். இன்று இரவு 7 மணிவரை விமான நிலையம் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என பேரிடர் தடுப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் எரிமலை வெடித்து சிதறுவதால் எழும் சாம்பல் வழியே விமானங்கள் பறந்து சென்றால் விமான இயந்திரங்கள் பாதிப்படையும். எரிபொருள் மற்றும் குளிர்விக்கும் சாதனங்கள் தடைபடும். தெளிவற்ற பார்வை நிலையும் ஏற்படும். இதனால் விமானங்கள் இந்த வழியே பறப்பது தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். ஆனால், எரிமலை வெடித்து சிதறுவது குறித்த எச்சரிக்கை அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com