காஷ்மீருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை

காஷ்மீரில் கனமழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 
காஷ்மீருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை


ஸ்ரீநகர்: காஷ்மீரில் கனமழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீநகர் துணை ஆணையர் சையத் அபித் ஷா தெரிவித்தார்.

கனமழை, நிலச்சரிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக பஹால்கம் பாதை வழியாக மேற்கொள்ளப்படும் அமர்நாத் யாத்திரை தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதேபோல் மோசமான வானிலை காரணமாகவே பால்தல் சாலை வழியான யாத்திரையும் நேற்று வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. 

தென் காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் சங்கம் அருகிலுள்ள ஜீலம் நதிக்கரையின் கொள்ளளவு அபாய எல்லையான 21 அடியைத் தாண்டியதால் அப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட நடவடிக்கையாக காஷ்மீரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகமான மழை மற்றும் மோசமான வானிலை காரணமாகவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ராஜோரியில் உள்ள தர்ஹாலி ஆற்றில், வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com