ராகுல் காந்தி விடுமுறை கால அரசியல்வாதி இல்லை: சோனியா காந்தி அதிரடி பேச்சு 

மக்களை அணுகும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது என்ற சோனியா ராகுல் காந்தி விடுமுறை
ராகுல் காந்தி விடுமுறை கால அரசியல்வாதி இல்லை: சோனியா காந்தி அதிரடி பேச்சு 

மும்பை: மக்களை அணுகும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது என்ற சோனியா, ராகுல் காந்தி விடுமுறை கால அரசியல்வாதி அல்ல என்று கூறினார். 

மும்பையில் நடைபெற்று வரும் இந்தியா டுடே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவில் இருந்து விடுவிக்கப்பட்டதில் இருந்து, தனது குழந்தைகளை, அவர்களின் சொந்த விருப்பு, வெறுப்புகள் மற்றும் இந்தியாவில் உள்ள ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் முதல்முறையாக மனம் திறந்து பேசினார். 

சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை வெளியிட கட்டுப்பாடுகள் இல்லை. மாற்று கருத்து வெளியிட அனுமதிக்கப்படவில்லை. நல்லுறவு, நல்லிணக்கம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. தேசத்தை கட்டமைத்தவர்களுக்கு எதிராக அவதூறு பரப்பப்படுகிறது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அரசின் துறைகள் ஏவி விடப்படுகின்றன. வன்முறையாளர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். 

மக்களை அணுகும் முறையில் மாற்றம் கொண்டு வர  வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என கட்சி விரும்புகிறது. மக்களை கட்டுப்படுத்தும் கருவியாக ஆதார் மாறியுள்ளது. காங்கிரஸ் முஸ்லிம் கட்சி என மக்களிடம் தவறாக பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது.  

19 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவராக இருந்த 71 வயதான நான், தலைவர் பொறுப்பில் இருந்து விலகி, தனது மகன் ராகுல் காந்தியை கடந்த ஆண்டு நடந்த உள் கட்சி தேர்தல்களுக்குப் பின்னர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். வடகிழக்கு மாநிலங்களின் பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் போது நாட்டில் ராகுல் என்றும் அவர் விடுமுறை கால அரசியல்வாதி என்ற பாஜகவின் விமர்சனத்து பதில் அளிக்கும் வகையில், ராகுல் விடுமுறை கால அரசியல்வாதி இல்லை. அவர் தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்த மூன்று நாட்களுக்கு பின்னரே இத்தாலியில் உள்ள தனது பாட்டியை பார்க்க சென்றார் என கூறினார். 

காங்கிரல் தலைவர் பொறுப்புக்கு ராகுல் காந்தி வர வேண்டும் என மூத்த தலைவர்கள் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியதை குறிப்பட்ட சோனியா, ராகுல் மூத்த தலைவர்களை புறக்கணிப்பதில்லை. அதிகளவில் இளைஞர்கள் சேர வேண்டும் என ராகுல் விரும்புகிறார். எனது கருத்தை ராகுல் மீது திணிப்பதில்லை என்று கூறினார்.  

தனது மகளான பிரியங்கா குறித்து பேசுகையில், தனது குழந்தைகளுடன் முன்கூட்டியே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரியங்கா, தற்போது அரசியலில் தனது பங்கு குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும். 

மோடியின் தலைமையிலான பாஜக அரசால் எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்பட்டுள்ளன. வெற்று கோஷங்கள் மீது நம்பிக்கையில்லை. நமது சுதந்திரம் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளது. தலித்களுக்கு எதிராக அதிகளவில் வன்முறை நடக்கிறது என்றார்.

ஒருமித்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி செய்வேன். காங்கிரஸ் அமைப்பு ரீதியலான மக்களுடன் ஒன்றிணைய புது வழிகளை காங்கிரஸ் கண்டுபிடிக்க வேண்டும். மக்களை அணுகும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com