11 மாதங்களில் 1.48 லட்சம் ரயில்கள் தாமதமாகச் சென்றதாக ரயில்வே அமைச்சகம் தகவல்!

கடந்த ஏப்ரல் 2017 முதல் பிப்ரவரி 2018 வரையிலான 11 மாதங்களில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரயில்கள் சேருமிடத்தைத் தாமதமாகச்
11 மாதங்களில் 1.48 லட்சம் ரயில்கள் தாமதமாகச் சென்றதாக ரயில்வே அமைச்சகம் தகவல்!

சென்னை: கடந்த ஏப்ரல் 2017 முதல் பிப்ரவரி 2018 வரையிலான 11 மாதங்களில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரயில்கள் சேருமிடத்தைத் தாமதமாகச் சென்றடைந்தாக வெள்ளிக்கிழமை மக்களவையில் ரயில்வே அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களவையில் ரயில்வே அமைச்சகம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 2017 முதல் பிப்ரவரி 2018 வரையிலான 11 மாதங்களில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரயில்கள் சேருமிடத்தைத் தாமதமாகச் சென்றடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒவ்வொரு நாளும் 450 ரயில்கள் தாமதமாகச் சென்றுள்ளன. 75 ஆயிரத்து 880 மெயில் ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் தாமதமாகச் சென்றுள்ளன. 60 ஆயிரத்து  856 அதி விரைவு ரயில்கள் தாமதமாகச் சென்றுள்ளன.

ராஜதானி, சதாப்தி, துரந்தோ போன்ற 7 ஆயிரம் பிரீமியம் ரயில்கள் தாமதமாகச் சென்றுள்ளன. வட இந்தியாவில் பனி மூட்டத்தால் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மட்டும் 25 சதவீதம் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வ மதிப்பீட்டின்படி இந்தியாவில் 66 ஆயிரம் கிலோமீட்டர் ரயில் பாதைகளில் நாள்தோறும் 12 ஆயிரத்து 600 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

வழக்கமான வேகத்தில் செல்லும் ரயில்களை விட அதிகவேகத்தில் இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் ரயில்களுக்கு என்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அந்த ரயில்கள் தாமதமாக வந்தால் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி கொடுப்பதற்கு என எந்த விதிகளும் இல்லை.

ஒரு ரயில் ஒரு ரயில் இடைநிலை நிலையத்தை கடப்பதற்கான நேர அட்டவணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு ரயில் ஒரு இடைநிலை நிலையத்தில் 30 நிமிடங்களுக்கு தாமதமாகலாம், ஆனால் அந்த நேரத்திற்கு மேலாக கடந்து செல்கிறது. உதாரணமாக, பெரம்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே 6 கி.மீ தூரத்தை கடக்க ரயில்வே 40 நிமிடங்களை வழங்குகிறது.

ரயில்கள் தாமதத்திற்கு ரயில்வே டெர்மினலின் கொள்ளவு, டெர்மினல் கண்ட்ரோல்ட்ஸ் மற்றும் உபகரணங்களின் திடீர் பழுது காரணங்களாலும், பாதகமான வானிலை மூடுபனி மற்றும் மழை,  சாலை போக்குவரத்து தடை மற்றும் சாலைகளை கடப்பத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் போன்ற வெளிப்புறக் காரணங்கள் தாமதங்கள் ஏற்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

ரயில்வே சொத்துக்களை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள், அதிக ரயில் பாதைகள் அமைத்தல், தானியங்கிகளை அமைத்தலுக்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் மாநில போலீஸ் மற்றும் சிவில் அதிகாரிகளுடன் சிறந்த ஒருங்கிணைப்பு பணிகளை ஏற்படுத்தி தாமதங்களை தவிர்த்து சரியான கால நேரங்களில் ரயில்கள் சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரி்கள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com