அமிதாப் நலம்பெற வாழ்த்து கூறிய ரஜினி; குரங்கணி தீவிபத்தில் பலியான 11 பேருக்கு இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன்..?  

நடிகர் அமிதாப் நலம்பெற வாழ்த்து கூறிய ரஜினிகாந்தால், நாட்டையே உலுக்கிய குரங்கணி தீவிபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 
அமிதாப் நலம்பெற வாழ்த்து கூறிய ரஜினி; குரங்கணி தீவிபத்தில் பலியான 11 பேருக்கு இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன்..?  

சென்னை: நடிகர் அமிதாப் நலம்பெற வாழ்த்து கூறிய ரஜினிகாந்தால், நாட்டையே உலுக்கிய குரங்கணி தீவிபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதலோ, உயிரிழந்த 11 பேருக்கு இரங்கலோ கூடத் தெரிவிக்க மனமில்லாத ரஜினியால் தமிழத்தில் என்ன மாற்றம் கொண்டு வந்துவிட முடியும் என சமூக வலைத்தளங்களில் விமரினங்கள் வைரலாகி வருகின்றன.

தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் சென்னை, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 36 பேர் மலையேற்றப் பயிற்சிக்கு கடந்த சனிக்கிழமை சென்றனர். அங்கு ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கினர். இவர்களில் சம்பவ இடத்திலேயே 9 பேர், மருத்துவ சிகிச்சை பலனின்றி 2 பேர் என 11 பேர் இறந்தனர். 10 பேர் சிறுகாயங்களுடனும் மீட்கப்பட்டனர். பலத்த காயமடைந்தவர்கள் மதுரையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாட்டையே உலுக்கிய குரங்கணி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல், இறந்தவர்களுக்கு இரங்கல் கூட தெரிவிக்க மனமில்லாத ரஜினிகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் அமிதாப் பச்சன் நலம்பெற வேண்டும் என வாழ்த்தி இருப்பது சமூக வலைத்தளங்கில் கடுமையான விமரிசனங்களை எழுப்பியுள்ளது.

அரசியல் கட்சி தொடங்கி உள்ள அவரது நண்பர் கமல்ஹாசன் இரங்கலும், ஆறுதலும் கூறுயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னை வாழ வைத்த தமிழக மக்கள் என பேசும் ரஜினி, தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க மனமற்றுப் போனது ஏன்? என்று கேட்டிருப்பதுடன் அவரது மனதில் கன்னடன் என்ற உணர்வும், நடிகன் என்ற உணர்வு மட்டுமே உள்ளது. அவரை வாழ வைத்த தமிழ் மக்களுக்கான சேவை குறித்த எந்த எண்ணமும் துளியும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

ரஜினிகாந்த் ஒரு செலக்ட்டிவ் அம்னீஷியா என கடுமையாக விமரிசனம் செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com