மம்தா தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டும்: ராம்ஜெத்மலானி வலியுறுத்தல்

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மூன்றாவது அணியை உருவாக்கி, பிரதமர்
மம்தா தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டும்: ராம்ஜெத்மலானி வலியுறுத்தல்

போபால்: பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மூன்றாவது அணியை உருவாக்கி, பிரதமர் நரேந்திர மோடியை வரும் மக்களவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று முன்னாள் சட்ட அமைச்சரும், பிரபல மூத்த வழக்குரைஞருமான ராம்ஜெத் மலானி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று இந்தூரில் செய்தியாளர்களிடம் ராம்ஜெத்மலானி பேசுகையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டும். 

பாஜக மற்றும் காங்கிரஸ் அரசுகள் கருப்பு பணத்தை ஜெர்மனி மற்றும் பிற நாடுகளில் இருந்து கொண்டு மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளில் தோல்வி அடைந்துவிட்டன. அவர்கள் இருவரும் சேர்ந்து மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். 

கருப்பு பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் மீது நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் என்.டி.ஏ அரசாங்கத்திற்கு அதிகாரத்தில் இருக்க உரிமை இல்லை கடுமையாக விமர்சித்த ஜெத்மலானி வரும் மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை பதவியில் இருந்து நீக்க நேர்மையான தலைவர்களை கொண்டு மூன்றாவது அணி அமைய வேண்டும்.  

அந்த மூன்றாவது அணி மம்தா தலைமையில் அமையலாம் என்றும் பிரதமர் ஆவதற்கு மம்தா தகுதியானவர் என்று ஜெத்மலானி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com