ஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்: மம்தா பானர்ஜி

ஈராக்கில் 39 இந்தியர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதற்கு
ஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா:  ஈராக்கில் 39 இந்தியர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் உள்ள மொசூல் என்ற இடத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகளால் 39 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட அந்த 39 இந்தியர்களும் இறுந்துவிட்டதாக தற்போது நாடாளுமன்றத்தில் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 

உயிரிழந்த 39 இந்தியர்களும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பணி நிமித்தமாக அவர்கள் ஈராக்கின் மொசூல் என்ற இடத்தில் இருந்துள்ளனர். 

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், மொசூல் நகரில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி மற்றும் மிகுந்த மனவேதனை அடைந்தேன். உறவினர்களை இழந்து வாடும் 39 குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் மட்டும் போதாது. அவர்களுடன் எங்கள் நினைவுகளும் பிரார்த்தனைகளும் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே சிங் அவர்களது உடல்களை இந்தியா கொண்டு வர துபாய் செல்லவிருப்பதாக தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com