குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பான விசாரணை நாளை மறுநாள் தொடங்குகிறது

குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பான விசாரணை நாளை மறுநாள் தொடங்குகிறது. சம்பவ இடத்திற்கு
குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பான விசாரணை நாளை மறுநாள் தொடங்குகிறது

குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பான விசாரணை நாளை மறுநாள் தொடங்குகிறது. சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணையை அதுல்ய மிஸ்ரா தொடங்குகிறார். 

தேனி மாவட்டம் போடி அருகே, குரங்கணி மலைப்பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் சிக்கி, அங்கு மலையேற்றத்திற்காகவும், சுற்றுலாக்காகவும் சென்ற கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 16 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ராவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அவர் 2 மாதங்களுக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் குரங்கணி காட்டுத் தீ சம்பவத்துக்கான காரணங்கள் குறித்தும் இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் என்பது குறித்தும் அதுல்ய மிஸ்ரா நாளை மறுநாள் தனது விசாரணையை தொடங்குகிறார். அனுமதி பெற்ற விவகாரம், குரங்கணி பகுதி மக்களிடம் விசாரணை நடத்த உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com