ராமர் ரதயாத்திரை எதிர்ப்பது ஏன்?: தமிழிசை கேள்வி

அமைதியமான முறையில் நடந்துவரும் ராமர் ரதயாத்திரையை எதிர்ப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய தமிழிசை, அப்படி எதிர்ப்பது ஹிந்துக்களை 
ராமர் ரதயாத்திரை எதிர்ப்பது ஏன்?: தமிழிசை கேள்வி

வேலூர்: அமைதியமான முறையில் நடந்துவரும் ராமர் ரதயாத்திரையை எதிர்ப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய தமிழிசை, அப்படி எதிர்ப்பது ஹிந்துக்களை அவமானப்படுத்துவது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ஆம்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராமர், சிலையுடன் ஒரு ரதம் கடந்த பல நாட்களாக நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு சென்று இன்று தமிழகத்துக்கு வருகிறது. இதில் எதிர்ப்பு தெரிவித்து கைதாகும் அளவுக்கு என்ன இருக்கிறது? நாடு முழுவதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக நடந்து வருகிறது. 

ஒரு அமைப்பு தங்கள் கருத்துக்களுடன் ஒரு ரத யாத்திரையை நடத்துகிறது. அதில் நாட்டுக்கோ, மதத்துக்கோ சமூகத்துக்கோ எதிரான எந்த கருத்தும் பரப்பப்படவில்லை. ராமர் சிலையை மட்டும் வைத்து யாத்திரை செய்கிறார்கள். இதில் என் தவறு இருக்கிறது? 

பிற மதத்துக்கு எதிரான கருத்துக்களையோ, ஒவ்வாத கருத்துக்களையோ தெரிவித்தால் எதிர்ப்பு தெரிவிக்கலாம். 85 சதவீத மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரு தெய்வ சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது என்று சொல்வதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதாவதும் ஹிந்துக்கள் நம்பிக்கை சார்ந்த எந்த வி‌ஷயங்களும் தமிழ்நாட்டில் நடைபெற கூடாது என்று திட்டமிட்டு அப்பட்டமாக செயல்படுவது கண்டனத்துக்குரியது.

யாத்திரையை ராமர் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் வரவேற்கட்டும். வணங்கட்டும். உங்களுக்கு விருப்பமில்லையா முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விட வேண்டியது தானே? ரதத்தையே அனுமதிக்க மாட்டோம் என்று சொல்ல என்ன உரிமை இருக்கிறது? 
மு.க.ஸ்டாலினுக்கும் ரத யாத்திரை தடுப்புக்கும் என்ன சம்பந்தம்? ஹிந்துக்களின் உரிமையை பறிக்க ஸ்டாலின் யார்? என்று அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பியவர், இவர்கள் சொல்வதை பார்த்தால் தமிழகத்தில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களே இருக்க கூடாது. கடவுள் வழிபாட்டு செயல்களே நடைபெற கூடாது என்று திட்டமிட்டு செயல்படுவது போல் தெரிகிறது என குற்றம்சாட்டினார். 

மேலும் ஒட்டுமொத்த தேசம் சார்ந்த உரிமையை தமிழ்நாட்டில் மட்டும் பறிப்போம் என்ற உணர்வு அபாயகரமான விளைவுகளை உருவாக்கும். அமைதியாக தங்கள் வழிபாட்டு நிகழ்வுகளை கொண்டாடும் ஹிந்துக்களை அவமானப்படுத்த வேண்டாம். உங்களின் அரசியலுக்காக மத வழிபாடுகளை கொச்சைப்படுத்தாதீர்கள். உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாமல் இருங்கள் என்று தமிழிசை வேண்டுகோள் விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com