நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது பணிக்கொடை திருத்த மசோதா- 2018

பணிக்கொடை வழங்குதல் திருத்த மசோதா- 2018 நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது. 
நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது பணிக்கொடை திருத்த மசோதா- 2018

பணிக்கொடை வழங்குதல் திருத்த மசோதா- 2018 நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது.  இந்த சட்ட திருத்த மசோதா மூலம் தனியார் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் / சிசிஎஸ் (ஓய்வூதியம்) விதிகளின்கீழ் வராத, அரசின்கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் ஊழியர்களிடையே இணக்கத்தை இந்த மசோதா உறுதி செய்கிறது. அரசுத் துறையில் உள்ள தங்களையொத்த ஊழியர்களுக்கு இணையாக, அதிகபட்ச பணிக்கொடை பெறுவதற்கு வழிவகை செய்யும் 

கடந்த 1972-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணிக்கொடை வழங்கல் சட்டத்தின் கீழ், தொழிற்சாலைகள், சுரங்கங்கள், எண்ணெய் நிறுவனங்கள், தோட்டங்கள், துறைமுகங்கள், ரயில்வே நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படுகிறது.

பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் ஒரு தொழிற்சாலையில், ஒருவர் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கும் மேல் பணி புரிந்தால், அவர் பணிக்கொடை பெறத் தகுதியானவர் ஆவார். ஒருவர் பணியில் இருந்து ஓய்வுபெறும்போது, ஆண்டுக்கு 15 நாள்கள் ஊதியம் என்ற அடிப்படையில், அவர் மொத்தம் பணியாற்றிய ஆண்டுகளைக் கணக்கிட்டு, பணிக்கொடை வழங்கப்படுகிறது.
இதில், பணிக்கொடை அதிகபட்சமாக, ரூ.10 லட்சம் வரை வழங்குவதற்கு கடந்த 2010-ஆம் ஆண்டு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. 

இதனிடையே, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமலுக்கு வந்த பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் பணிக்கொடை உச்ச வரம்பு, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஆனால், அவ்வாறு இல்லாமல், ஊதிய உயர்வு, விலைவாசி உயர்வு, ஊதியக் குழுவின் எதிர்காலப் பரிந்துரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கொடை உச்ச வரம்பை அவ்வப்போது மாற்றி அமைப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருமாறு முன்மொழியப்பட்டது.

இந்த மசோதா,  மக்களவையில் 15.03.2018 அன்று நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.

1972-ஆம் ஆண்டின் பணிக்கொடை வழங்கல் சட்டம் 10 அல்லது அதற்கும் அதிகமானவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தும்.  பணியாற்றுவோருக்கு ஓய்வுக்குப் பின் (வயது முதிர்ச்சி அல்லது உடல் ரீதியாக செயல்பட இயலாமை அல்லது உடலின் முக்கியமான உறுப்பு செயலிழத்தல் காரணமாக ஓய்வு பெறுதல்) சமூகப் பாதுகாப்பு வழங்கும் முக்கிய நோக்கத்துடன், இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. 

எனவே, பணிக்கொடை வழங்கும் சட்டம் 1972 என்பது, தொழில் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் ஊதியம் பெறும் மக்களுக்கு மிக முக்கியமான சமூகப் பாதுகாப்பு சட்டமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com