தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து திரையரங்குகளும் இயங்கும் என அறிவிப்பு

தமிழகத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து திரையரங்குகளும் இயங்கும் என அறிவிப்பு

தமிழகத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சினிமா திரையரங்குகளில் "கியூப் டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் படங்களைத் திரையிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்ச் 1-ஆம் தேதி முதல், திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தை அறிவித்தனர்.

இப் பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காததால், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் துவங்குவதாக அறிவித்தனர். இதையடுத்து கடந்த 21 நாட்களாக  நீடித்த இந்த போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. 

உள்துறை செயலாளர் உடன் நடந்த பேச்சுக்கு பிறகு தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

கேளிக்கை வரியை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கை அரசு பரிசீலனை செய்யவதாகவும் சினிமாவை வாழப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளனர் என்றும்  திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.

மேலும் தங்களது கோரிக்கைகள் குறித்து அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com