பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல் திருடப்பட்டது உண்மைதான்: மார்க் ஜூகர்பெர்க்

உலகின் பிரபலமான சமூக வலைத்தளங்களில் பேஸ்புக்கும் ஒன்று. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் இதனைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல் திருடப்பட்டது உண்மைதான்: மார்க் ஜூகர்பெர்க்

உலகின் பிரபலமான சமூக வலைத்தளங்களில் பேஸ்புக்கும் ஒன்று. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் இதனைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் தற்பொழுது பேஸ்புக்கில் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு தனியார் நிறுவனங்கள் மூலம் அரசியல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்தினைச் சேர்ந்த 'கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா' என்ற அரசியல் பிரசார நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த இங்கிலாந்து எம்.பி. டாமியன் கொலின்ஸ் என்பவர் தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முன் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் வரும் 26–ந் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்ட அவர், தவறு நடந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளதாகவும், வருங்காலங்களில் இது போன்ற தகவல் திருட்டுகளை சகிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com