ஈரோடு பெருந்துறையில் திமுக மண்டல மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது 

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே திமுக மண்டல மாநாடு இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
ஈரோடு பெருந்துறையில் திமுக மண்டல மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது 

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே திமுக மண்டல மாநாடு இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கோவை நெடுஞ்சாலை ஓரம், சரளை பகுதியில், தி.மு.க. மண்டல மாநாடு இன்று சனிக்கிழமை மற்றும் நாளை  ஞாயிறுக்கிழமை (மார்ச் 24, 25) ஆகிய 2 நாள்கள் நடைபெருகிறது. 

இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு அரித்துவார மங்கலம் ஏ.கே.பழனிவேல் குழுவினரின் நாகஸ்வரம், தவிலிசையுடன் மாநாடு துவங்கியது. காலை 10 மணிக்கு எம்எல்ஏ கோவி.செழியன் மாநாட்டுக் கொடியே ஏற்றி வைத்தார். இதையடுத்து வரவேற்புக் குழுத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான முத்துசாமி வரவேற்றுப் பேசி வருகிறார். 

தொடர்ந்து மாநாட்டுச் செயலர்கள் என்.நல்லசிவம், முபாரக், சிவலிங்கம், வீரபாண்டி ஆ.ராஜா, ரா.ராஜேந்திரன், க. செல்வராஜ், இல.பத்மநாபன், சி.ஆர்.ராமசந்திரன், தமிழ்மணி, மு.முத்துசாமி, நா.கார்த்திக், நன்னியூர் ராஜேந்திரன், கே.எஸ்.மூர்த்தி, பார்.இளங்கோவன் ஆகியோர் வழிமொழிந்து பேசுகிறார்கள்.

பிற்பகல் 11.15 மணிக்கு மாநாட்டுத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். இரவு 9 மணிக்கு முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சிறப்புரையாற்றுகிறார்.

2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. கட்சி முன்னோடிகள் பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார்கள்.

மாலை 4 மணிக்கு மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இரவு 8 மணிக்கு கட்சியின் பொதுச் செயலர் அன்பழகனும் இரவு 8.30 மணிக்கு கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகின்றனர்.

இந்த மாநாட்டில் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர் உள்பட 15 மாவட்டங்களில் இருந்து திமுகவினர் கலந்து கொண்டுள்ளனர். 

மாநாட்டுக்காக, 1.50 லட்சம் சதுர அடி பந்தல், ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. கோட்டை போன்ற மாநாட்டு முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. புகைப்பட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், 100 ஜோடிகளுக்கு, இலவச சுயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.

திமுக செயல் தலைவராக, மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் மாநாடான ஈரோடு மண்டல திமுக மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையை உருவாக்குமா என்றும் கூறப்படுகிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com