உ.பி: காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் முக்கிய ரவுடிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உ.பி: காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் முக்கிய ரவுடிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டு போலீஸார் காயமடைந்துள்ளனர். 

புதுதில்லி, நொய்டா ஆகிய நகரங்களில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய சிரவண் சவுத்திரியைப் பிடித்துக் கொடுத்தால் ரூ.50 ஆயிரம் தருவதாக உத்தரப்பிரதேச அரசும் தில்லி அரசும் அறிவித்திருந்தன.

இந்நிலையில், நேற்று சனிக்கிழமை முதல் உத்தரப்பிரதேசத்தின் பல இடங்களில் என்கவுண்டர்கள் நடந்தது. அதிகாலை நொய்டாவில் நிகழ்ந்த காவல்துறையினருடனான மோதலில் தோடப்பட்டு வந்த முக்கிய ரவுடியான சிரவண் சவுத்திரி சுட்டுக்கொல்லப்பட்டான். அவனிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கியை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். 

இதனிடையே தாத்ரி என்ற இடத்தில் பதுங்கி இருந்த ஜிதேந்தர் என்ற ரவுடி, சகாராண்பூரில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த விவசாயி ஒருவரை துப்பாக்கியால் சுட்டு அவர் பையில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றான். இதனையடுத்து செக்போஸ்ட்கள் உஷார்படுத்தப்பட்டன. போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட துவங்கினர். போலீஸார் பதிலடியில் இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக இரண்டு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் அகாசன் என்ற குற்றவாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். அவன் மீது பல கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. மற்றொருவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான். 

ஐம்பதுக்கு மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய அகாசன் சலீமைப் பிடித்துத் தருவோருக்கு ரூ.25 ஆயிரம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

காசியாபாத் நகரில் போலீஸாருடன் நடந்த என்கவுன்டரில் ராகுல் என்பவன் காயமடைந்தான். சச்சின் என்ற போலீஸார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதே நகரில் மற்றொரு இடத்தில் நடந்த என்கவுன்டரில் சோனு என்ற குற்றவாளி காயமடைந்தான். அவனது தலைக்கு ரூ.25 ஆயிரம் என அறிவிக்கப்படிருந்தது. 

ரவுடிகளுடனான மோதலில் காவல் ஆய்வாளர் ஒருவம், போலீஸார் ஒருவரும் காயமடைந்தனர்.

முசாபர் நகரில், போலீஸ் சோதனை சாவடி மீது ரஹீஸ் மற்றும் ஜாவேத் என்ற ரவுடிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீஸார் திருப்பி சுட்டதில் இருவரும் காயமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ரஹீஸ் மீது 10 வழக்குகளும், ஜாவேத் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்னர்.

உத்தரப்பிரதேசத்தின் சோரன்பூர், காசியாபாத், முசாபர்நகர் உள்பட 4 இடங்களில் நடந்த அதிரடி என்கவுண்டரில் 5 குற்றவாளிகள் குண்டு காயத்துடன் பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளியிடமிருந்து மோட்டார் சைக்கிள், கத்தி மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com