உ.பி.யில் அதிர்ச்சி: 10-ம் வகுப்பு தேர்வில் 150 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

உத்தரபிரதேசத்தில் நேற்று வெளியிடப்பட்ட 10 மற்றும் பிளஸ் டூ தேர்வில் மாநிலத்தில் உள்ள 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி
உ.பி.யில் அதிர்ச்சி: 10-ம் வகுப்பு தேர்வில் 150 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

லக்னோ: உத்தரபிரதேசத்தில் நேற்று வெளியிடப்பட்ட 10 மற்றும் பிளஸ் டூ தேர்வில் மாநிலத்தில் உள்ள 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாதது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.29) வெளியிடப்பட்டடது. இதில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட வெற்றி பெறவில்லை. இந்த பள்ளிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகும். ஏற்கனவே, மாநிலத்தில் மொத்தமுள்ள 75 மாவட்டங்களில் 50 மாவட்டங்கள் கவனிக்கத்தக்கவை என மாநில கல்வித்துறையால் அறிவிக்கப்பட்ட  பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள 150 பள்ளிகளில், ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை. பத்தாம் வகுப்பில் 98 பள்ளிகளும், பிளஸ் டூ வகுப்பில் 52 பள்ளிகளும் ஒரு விழுக்காடு தேர்ச்சி வீதத்தைக் கூடப் பெறவில்லை. இதில் பெரும்பாலான பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களே தேர்வு எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தாய்மொழி ஹிந்தி கட்டாய பாடமாகவும் இருக்கிறது. ஆனால், பத்தாம் வகுப்பில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 776 பேரும், பிளஸ் டூ 7 லட்சத்து 81 ஆயிரத்து 276 பேரும் ஹிந்தி பாடத்தில் தோல்வி அடைந்து இருக்கிறார்கள்.

ஹிந்தியை தவிர ஆங்கிலம், சமஸ்கிருதம், கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களில் அதிக அளவில் மாணவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் 80.8 சதவீதம் பேரும், உருதில் 91 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். ஆனால் தாய் மொழியான ஹிந்தியில் 79.2 சதவீதம் பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள். 

அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 72.29. அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 71.55. இது மாநில தேர்வு சதவீதத்தை விட குறைவு. 

அலகாபாத் மாவட்டத்தில் 6 பள்ளிகள், அஜம்கார்க்கில் 6 பள்ளிகள், பைராச், மிர்சாப்பூர், மாவு மற்றும் ஹார்தாய் மாவட்டங்களில் தலா 5 பள்ளிகள், அவுரியா, கவுசாம்பி, கன்னூஜ், மதுரா, லக்மிபுர் கெரி, மெயின்புரி, அலிகார்க், அம்பேத்கர் நகர், ஹத்ராஸ், பஸ்தி, கோரக்பூர், ஜூவான்பூர், அம்ரோஹா, தியோரியா, லக்னோ மற்றும் ஆக்ராவில் தலா ஒரு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை.

இது தொடர்பாக மாநில கல்வி வாரிய செயலர் நீனா ஸ்ரீவத்சவா கூறுகையில், இந்த ஆண்டு மாணவர்கள் தேர்வில் காப்பியடிப்பதை தவிர்க்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல பள்ளிகளில் குறைந்தளவு மாணவர்களே தேர்வில் எழுதினர். சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடமிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர்களின் அறிக்கைக்கு பின்பு இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com